பைக்கில் சேலை சிக்கி வங்கி செயலாளர் பலி| Dinamalar

பைக்கில் சேலை சிக்கி வங்கி செயலாளர் பலி

Added : செப் 07, 2021
Share
திண்டிவனம் : விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் தேவராஜன் மனைவி அமுதா, 45; திண்டிவனம் அடுத்த புத்தநந்தல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளராக பணிபுரிந்து வந்தார். மகன் பாலாஜியுடன் 21, தனியே வசித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன் வாக்கூர் வங்கிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புத்தநந்தல் வங்கியில் பெண்டிங் வேலை இருந்தது. அதை முடிப்பதற்காக தனது அண்ணன்

திண்டிவனம் : விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் தேவராஜன் மனைவி அமுதா, 45; திண்டிவனம் அடுத்த புத்தநந்தல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

மகன் பாலாஜியுடன் 21, தனியே வசித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன் வாக்கூர் வங்கிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புத்தநந்தல் வங்கியில் பெண்டிங் வேலை இருந்தது. அதை முடிப்பதற்காக தனது அண்ணன் மகனின் நண்பரான வி.மருதுாரைச் சேர்ந்த கோகுல், 19; என்பவருடன், யமாகா பைக்கில் புத்தநந்தலுக்கு நேற்று காலை சென்றார்.வெள்ளிமேடுபேட்டை சாலை வடசிறுவளூர் அருகே 10:15 மணியளவில் அமுதாவின் சேலை, பைக் சக்கரத்தில் சிக்கியது. நிலை தடுமாறி கீழே விழுந்த அமுதா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அமுதா இறந்தார். கோகுல் காயங்களின்றி தப்பினார்.அமுதாவின் அண்ணன் இளஞ்செழியன், 51; அளித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X