கீழடியில் 34 பணியிடங்கள்; தொல்நடைக்குழு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் 34 பணியிடங்கள்; தொல்நடைக்குழு வரவேற்பு

Added : செப் 07, 2021
Share
சிவகங்கை : கீழடி அகல் வைப்பகத்தில் 34 நிரந்தர பணியிடங்களை உருவாக்கியதற்கும் தொல்லியல் துறையில் முதுநிலை பட்டய வகுப்புக்கும், 90 பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகங்கை தொல்நடை குழுவினர் வரவேற்றுள்ளனர்.சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா தெரிவித்துள்ளதாவது: பூலாங்குறிச்சி குன்றில் உள்ள களப்பிரர் காலத்து

சிவகங்கை : கீழடி அகல் வைப்பகத்தில் 34 நிரந்தர பணியிடங்களை உருவாக்கியதற்கும் தொல்லியல் துறையில் முதுநிலை பட்டய வகுப்புக்கும், 90 பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகங்கை தொல்நடை குழுவினர் வரவேற்றுள்ளனர்.

சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா தெரிவித்துள்ளதாவது: பூலாங்குறிச்சி குன்றில் உள்ள களப்பிரர் காலத்து கல்வெட்டுக்களை மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் 1979 ல் கண்டறிந்தார். களப்பிரர் காலம் இருண்ட காலம் என்பதை மாற்றியமைத்து சேந்தன் கூற்றன் என்ற மன்னரின் பெயர் இடம் பெற்றுள்ளது.அவரது ஆட்சி ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்துள்ளது. கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்படும் அகல் வைப்பகத்தில் 34 நிரந்தர பணியிடங்களை உருவாக்கியுள்ளதற்கும், தமிழகத்தில் உள்ள 90 பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்படவுள்ளதற்கும் சிவகங்கை தொல்நடை குழுவரவேற்கிறது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X