தகவல் தொடர்பில் மேம்படாத மேலவண்ணாரிருப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
எஸ்.புதுார் : சிங்கம்புணரி அருகே தகவல் தொடர்பு வசதி கிடைக்காமல் ஒட்டு மொத்த ஊராட்சியே பல ஆண்டுகள் பின்னோக்கி உள்ளது.எஸ்.புதுார் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் அவசர, ஆபத்து காலங்களில் போலீஸ், ஆம்புலன்சுக்கோ, தீயணைப்பு நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டுமென்றால் கூட 2 கி.மீ., துாரமுள்ள மலை

எஸ்.புதுார் : சிங்கம்புணரி அருகே தகவல் தொடர்பு வசதி கிடைக்காமல் ஒட்டு மொத்த ஊராட்சியே பல ஆண்டுகள் பின்னோக்கி உள்ளது.எஸ்.புதுார் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இக்கிராமத்தில் அவசர, ஆபத்து காலங்களில் போலீஸ், ஆம்புலன்சுக்கோ, தீயணைப்பு நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டுமென்றால் கூட 2 கி.மீ., துாரமுள்ள மலை உச்சிக்குச் சென்று அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது.பாதை வசதி இல்லாத சுடுகாடுஇப்பகுதியில் எந்த அலைபேசி டவரும் இல்லாததே இதற்கு காரணம். இக்கிராமத்திலிருந்து உரத்துப்பட்டி வழியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை வனத்துறை எதிர்ப்பு காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலவண்ணாரிருப்பு, கீழவண்ணாரிருப்பு கிராமங்களில் சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீரிலேயே இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.சமுதாய கூடத்தில் அங்கன்வாடி மையம் வெள்ளிக்குன்றம்பட்டியில் அங்கன்வாடி கட்டடம் இல்லாததால் பழுதடைந்த சமுதாய கூடத்திலேயே அது செயல்பட்டு வருகிறது.

அக்கட்டடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டடம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஊராட்சி மக்களின் மற்றொரு தலையாய பிரச்னை பகலில் குரங்குகளும் இரவில் காட்டு மாடுகளும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது ஆகும். மலைச்சாலையை ஒட்டி ஊராட்சி அமைந்துள்ளதால் கிராமத்திற்கு துணை காவல் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எந்த மனுவுக்கும் நடவடிக்கை இல்லை

ஜோதி பித்திரைச்செல்வம், ஊராட்சி தலைவர்: தகவல் தொடர்பை பொறுத்தவரை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் எங்கள் ஊராட்சி பின்னோக்கிய நிலையிலேயே உள்ளது.இப்பகுதியில் தனியார் நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களும் அலைபேசி டவர்கள் அமைக்க முன்வரவில்லை.இதனால் நாங்கள் படும் அவதிக்கு அளவே இல்லை. கலெக்டர் முதல் பிரதமர் வரை ஊராட்சி தலைவர் என்ற முறையில் பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பயிர்களை காப்பாற்ற தடுப்பு

பெ.பழனிச்சாமி, துணைத் தலைவர்: காட்டு மாடுகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. இரவு நேரங்களில் குடும்பத்தோடு கண்விழித்து காத்திருந்தால் கூட முட்டி தள்ளிவிட்டு பயிர்களை சேதப்படுத்துகிறது. எனவே இப்பகுதி கிராமங்களுக்குள் காட்டு மாடுகள் வராத அளவில் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X