பொது செய்தி

தமிழ்நாடு

யாசகம் கேட்டு அவமானப்படாதீர்கள்; திருநங்கையருக்கு அதிகாரி 'அட்வைஸ்'

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ரயில் பயணியரிடம் திருநங்கையர் யாசகம் கேட்டு தகராறில் ஈடுபட கூடாது என, விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில், பயணியரிடம் திருநங்கையர் பணம் கேட்டு தகராறு செய்வதுடன், பணம் தராதவர்களை திட்டுவது அதிகரித்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் புகார் எழுந்தது.இதையொட்டி, சென்னை எழும்பூர்
 யாசகம் கேட்டு அவமானப்படாதீர்கள்; திருநங்கையருக்கு அதிகாரி 'அட்வைஸ்'

சென்னை : ரயில் பயணியரிடம் திருநங்கையர் யாசகம் கேட்டு தகராறில் ஈடுபட கூடாது என, விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில், பயணியரிடம் திருநங்கையர் பணம் கேட்டு தகராறு செய்வதுடன், பணம் தராதவர்களை திட்டுவது அதிகரித்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் புகார் எழுந்தது.

இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில், திருநங்கையருக்கான விழிப்புணர்வு ஆலோசனை முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில், சென்னையை சேர்ந்த திருநங்கையர் பங்கேற்றனர்.

முகாமில், சென்னை ரயில்வே கோட்ட உதவி பாதுகாப்பு கமிஷனர் ராஜு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கியதாவது:ரயில் பயணியரிடம் யாசகம் கேட்டு தொந்தரவுசெய்யக்கூடாது. திருநங்கையர், அரசின் சார்பில், உதவிகள் வழங்கப்படுவதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

யாசகத்தை விட்டுவிட்டு, உழைத்து வாழவேண்டும் என, விரும்பினால் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர தயார். அமைதியாகவும், மரியாதையாகவும் வாழ்வதற்கான ஏற்ற சூழ்நிலைகளை அமைத்துக்கொள்ளுங்கள். பயணியரிடம் யாசகம் கேட்டு, தொந்தரவு செய்யாதீர்கள், அவமானப்படாதீர்கள்.இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-202116:17:45 IST Report Abuse
அப்புசாமி ஒரு 10 , 15 வருஷங்களுக்கு முன் அங்கொன்று , இங்கொன்றுமாக இருந்தவங்க இன்னிக்கி ஆயிரக்கணக்கில். இது எப்பிடி நிகழுதுன்னு தெரியலை. கைநிறை சம்பாரிக்குற மாதிரியும் தெரியுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X