சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வறுமையால் வாழ வழியில்லை; விஷ இலைகளை தின்று தற்கொலை

Added : செப் 07, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வாட்டிய வறுமையால் வாழ வழியில்லாமல் தன்னை நம்பியிருந்த குடும்பத்தினரை விட்டுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் வெள்ளிக்குன்றம்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி போதும்பொண்ணு, 24.கணவர் 2015 ல் இறந்துவிட தனது இரண்டு குழந்தைகள், மூளை வளர்ச்சி இல்லாத கொழுந்தன், மற்றும் வயதான மாமனார், சின்ன
 வறுமையால் வாழ வழியில்லை; விஷ இலைகளை தின்று தற்கொலை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வாட்டிய வறுமையால் வாழ வழியில்லாமல் தன்னை நம்பியிருந்த குடும்பத்தினரை விட்டுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் வெள்ளிக்குன்றம்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி போதும்பொண்ணு, 24.கணவர் 2015 ல் இறந்துவிட தனது இரண்டு குழந்தைகள், மூளை வளர்ச்சி இல்லாத கொழுந்தன், மற்றும் வயதான மாமனார், சின்ன மாமனார் ஆகியோருடன் ஒரே குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து அனைவரையும் காப்பாற்றிய நிலையில் சில வருடங்களாக போதும்பொண்ணுக்கு கர்ப்பப்பையில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவம் பார்க்க வழியில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். ஆக. 31-ம் தேதி அப்பகுதி மலையில் விஷச் செடிகளை பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பணமில்லாமல் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று வீட்டிலேயே இறந்துள்ளார். அவர் இறந்ததை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

பல மணி நேரத்திற்கு பிறகு மதுரை மாவட்டம் சூரப்பட்டியில் உள்ள அவரது தந்தை மூக்கன் வந்து பார்த்து, அவர் அளித்த புகாரில் உலகம்பட்டி போலீசார் போதும்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போதும்பொண்ணு இறந்த நிலையில் அவரை நம்பியிருந்த 5 பேரின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X