பொது செய்தி

தமிழ்நாடு

மகளிடம் அத்துமீறியவரை காப்பாற்றுகிறதா போலீஸ்?

Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டாவது கணவர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்தும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வானகரத்தைச் சேர்ந்த 34 வயது பெண், நேற்று அளித்துள்ள புகார்:என் கணவர் குமார், 2013ல், காசநோயால் இறந்துவிட்டார். எனக்கு, 13 வயதில் மகள், 9 வயதில் மகன் உள்ளனர். என் மகள்

சென்னை : தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டாவது கணவர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்தும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வானகரத்தைச் சேர்ந்த 34 வயது பெண், நேற்று அளித்துள்ள புகார்:என் கணவர் குமார், 2013ல், காசநோயால் இறந்துவிட்டார். எனக்கு, 13 வயதில் மகள், 9 வயதில் மகன் உள்ளனர். என் மகள் படிக்கும் பள்ளியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த கற்பகக்கனி என்பவர், என்னுடன் நட்பாக பேசி வந்தார். நான் கைம்பெண் என தெரிந்தும், 2019ல், திருமணம் செய்தார். எங்களுக்கு, 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.இவர் வரதட்சணையாக கார் வாங்கி தரக் கேட்டார். 1.50 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தி, மாத தவணைக்கு கார் வாங்கி கொடுத்தேன்.திருமணத்திற்கு பின், அவரது நடத்தை சரியில்லை. பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. மேலும், நீச்சல் கற்றுத் தருவதாக கூறி, என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.இது குறித்து, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் கற்பகக்கனி மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கைது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அந்த பெண் கூறுகையில், 'கற்பகக்கனி மீது நடவடிக்கை எடுக்க போலீசார், 5,000 ரூபாய் கேட்டனர். என்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், காவல் நிலைய கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-செப்-202106:25:04 IST Report Abuse
Mani . V ........அந்த பெண் கூறுகையில், 'கற்பகக்கனி மீது நடவடிக்கை எடுக்க போலீசார், 5,000 ரூபாய் கேட்டனர். என்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், காவல் நிலைய கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தனர்' என்றார்.....இந்த பன்னாடைகள் மீது திரு. சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க மாட்டாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X