குளத்தில் குளித்த விவசாயி முதலை கடித்து படுகாயம் | Dinamalar

குளத்தில் குளித்த விவசாயி முதலை கடித்து படுகாயம்

Added : செப் 07, 2021
Share
கிள்ளை : குளத்தில் குளிக்கும் போது முதலை கடித்ததில், விவசாயி படுகாயமடைந்தார்.கடலுார் மாவட்டம், கிள்ளை அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, 35; விவசாயி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில், குளித்தார். அப்போது, முதலை அவரது முகத்தை கடித்து, குதறியது. அவர், அலறியடித்து கரைக்கு ஓடினார். இருந்தும், அவரது முகம் முழுவதும் கடித்ததில், 10க்கும் மேற்பட்ட

கிள்ளை : குளத்தில் குளிக்கும் போது முதலை கடித்ததில், விவசாயி படுகாயமடைந்தார்.

கடலுார் மாவட்டம், கிள்ளை அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, 35; விவசாயி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில், குளித்தார். அப்போது, முதலை அவரது முகத்தை கடித்து, குதறியது. அவர், அலறியடித்து கரைக்கு ஓடினார். இருந்தும், அவரது முகம் முழுவதும் கடித்ததில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிராமத்தினர் திரண்டு குளத்தில் இருந்த முதலையை பிடித்து, கரைக்குக்கொண்டு வந்து கட்டி வைத்திருந்தனர்.சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் அஜிதா மற்றும் வனக் காப்பாளர்கள், முதலையை மீட்டு சிதம்பரம் வக்கரமாரி நீர் தேக்கத்தில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X