உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 40; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூமா, 35; இவர்களுக்கு 8 வயது மகள், 6 வயது மகன் உள்ளனர்.கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பூமா, தனது 2 பிள்ளைகளையும் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளார்.நேற்று காலை வெகுநேரமாகியும் பூமா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு பூமா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.டி.எஸ்.பி., மணிமொழியன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பூமா கழுத்து நெரிக்கப்பட்டும், கத்தியால் தாக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.போலீஸ் விசாரணையில், நேற்று காலை கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரகாஷ், மனைவியை கொலை செய்தது தெரியவந்ததுஉளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று இரவு பிரகாஷை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE