தமிழ்நாடு

கருணை காட்டுங்க! காலை, மாலை , இரவில் தேவை கூடுதல் பஸ்கள்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில் காலை, மாலை, இரவு நேரங்களில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்கப்பட வேண்டும் .மாவட்டம் கிராமங்கள் நிறைந்தது. குறிப்பாக சாத்துார் ,சிவகாசி ,அருப்புக்கோட்டை விருதுநகர் ,ராஜபாளையம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளை யொட்டி சிறிய கிராமங்களுக்கு இரவு , காலை நேரங்களில் இயக்கப்பட்ட பஸ்கள்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில் காலை, மாலை, இரவு நேரங்களில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்கப்பட வேண்டும் .மாவட்டம் கிராமங்கள் நிறைந்தது. குறிப்பாக சாத்துார் ,சிவகாசி ,அருப்புக்கோட்டை விருதுநகர் ,ராஜபாளையம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளை யொட்டி சிறிய கிராமங்களுக்கு இரவு , காலை நேரங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5:00 மணி முதல் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது காலை 6 :00 மணிக்கு முன்பும், இரவு 8 :00 மணிக்கு பின்பும் பஸ் போக்குவரத்து இல்லை .இதனால் கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வந்து செல்லும் விவசாயிகள் ,மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

கிராமங்களிலிருந்து கீரைகள், காய்கறிகள் ,பழங்கள் முதலியவற்றை தலைச்சுமையாக பஸ்களில் கொண்டுவந்து நகர் பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு மாலையில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு வீடுகளுக்கு செல்வது வழக்கம் காலை நேரங்களில் பஸ் இல்லாததால் உறவினர்களின் இருசக்கர வாகனங்களில் நகர் பகுதிக்கு வரும் நிலையில் உள்ளனர் .

இரவு நேரத்தில் சிறிய கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இயக்கப்படவில்லை. மெயின் ரோடுகளில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமே பஸ் வசதி உள்ளது. மெயின்ரோட்டில் இருந்து 6 முதல் 10.கி.மீ.,தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்ல பொது மக்கள் ஆட்டோ ,வாடகை வேன், கார்களையே நம்பி உள்ளனர் . இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிறிய கிராமங்களுக்கு இரவு நேரத்திலும் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ..........

வெளியூர் பயணிகள் அவதி

இரவு 8:00 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. வெளியூரில் இருந்து கிராமத்தில் உள்ள கோயில்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் வரும் பயணிகள் பஸ் வசதியில்லாத நிலையில் பஸ்ஸ்டாண்டிலே துாங்கும் நிலை உள்ளது. அதிகாலை6:00 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுவதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முன்பை போல் வழக்கமான காலை, மாலை, இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயபிரகாஷ், வியாபாரி, சாத்துார்..............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X