பொது செய்தி

இந்தியா

முதலீடுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.2.15 கோடி மோசடி: 6 பேருக்கு வலை

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, ரூ. 2.15 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.புதுச்சேரி, குருமாம்பட்டு முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயபால், 50; மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார்.இவருக்கு, கடந்த

புதுச்சேரி : முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, ரூ. 2.15 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, குருமாம்பட்டு முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயபால், 50; மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார்.இவருக்கு, கடந்த 2019ம் ஆண்டு, வடமங்கலம் தனியார் கம்பெனியில் மிஷின் ஆப்பரேட்டராக பணியாற்றிய பங்கூரை சேர்ந்த பூங்குன்றம் அறிமுகம் ஆனார்.அவர், 'மேட்டுப்பாளையம் வி.எம். கார்டன், மாணிக்கம் செட்டியார் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்த வேலையன், கண்டமங்கலம், மருதுாரில் குவாண்டம் புராபிட் குரூப் என்ற கம்பெனி நடத்தி வருகிறார்.அதில், நான் நிர்வாக அதிகாரியாக உள்ளேன்.

இந்த கம்பெனியில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், ஒரே வருடத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறியுள்ளார்.இதை நம்பி, ஒரு லட்சம் ரூபாயை ஜெயபால், கடந்த 2019 ஜூலை மாதம் வேலையனிடம் கொடுத்துள்ளார். பின்பு மாதம் ரூ.7 ஆயிரம் வீதம், ஜெயபால் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, ஜெயபால் வலியுறுத்தலின் பேரில், உறவினர்கள், நண்பர்கள் என 60க்கும் மேற்பட்டோர், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர், நிதி நிறுவனத்தின் ஆசை வார்த்தையை நம்பி ஜெயபால் ரூ. 18 லட்சம் முதலீடு செய்துள்ளார்.முதலீடு செய்தவர்களுக்கு, 2020 ஜனவரி வரை, அவரவர் வங்கி கணக்கில் பணத்தை நிதி நிறுவனம் செலுத்தி வந்தது. அதன்பின்பு பணம் செலுத்தப் படவில்லை.செலுத்திய பணத்தை திரும்ப கேட்க சென்றபோது, வேலையன் மாயமானார்.நிறுவன ஊழியர்கள் பூங்குன்றம், அண்ணாதுரை, ஏழுமலை, இளவரசன் ஆகியோர் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.விழுப்புரம் ராதாபுரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி, விக்கிரவாண்டி கீதா, கண்டமானடி தமிழ்மாறன், புதுச்சேரி ரவிச்சந்திரன், துவாரகேஸ்வரி உள்ளிட்டோரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக ஜெயபால், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். நிதி நிறுவன நிர்வாகி ரசூல், வேலையன், பூங்குன்றம், ஏழுமலை, அண்ணாதுரை, இளவரசன் ஆகியோர் மீது மோசடி பிரிவின் கீழ், இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்தனர்.விசாரணையில், பலரிடம் ரூ. 2.15 கோடி முதலீடாக பெற்று ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X