பொது செய்தி

இந்தியா

மும்பை பெண் மானபங்கம் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மும்பை பெண்ணை மானபங்கம் செய்த வாலிபருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மும்பையைச் சேர்ந்த 29 வயது பெண், கடந்த 20.1.2018 அன்று புதுச்சேரிக்கு நண்பருடன் வந்தார். அன்று இரவு 9:30 மணிக்கு, இருவரும் கேண்டீன் வீதியில் நடந்து சென்றனர்.எஸ்.வி.பட்டேல் சாலை சந்திப்பு அருகே, சோலை நகர், நெய்தல்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மும்பை பெண்ணை மானபங்கம் செய்த வாலிபருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மும்பையைச் சேர்ந்த 29 வயது பெண், கடந்த 20.1.2018 அன்று புதுச்சேரிக்கு நண்பருடன் வந்தார். அன்று இரவு 9:30 மணிக்கு, இருவரும் கேண்டீன் வீதியில் நடந்து சென்றனர்.எஸ்.வி.பட்டேல் சாலை சந்திப்பு அருகே, சோலை நகர், நெய்தல் வீதியைச் சேர்ந்த ரவிநாயகம் மகன் பிரகாஷ், 29; அப்பெண்ணின் உடலை தொட்டு மானபங்கம் செய்து விட்டு தப்ப முயன்றார்.பொது மக்கள் பிரகாஷை துரத்தி பிடித்து, பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார், 354 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ்க்கு, 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரவின்குமார் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X