பாலம் உடைந்து 20 ஆண்டாச்சு... சரி செய்வது யாரோ... தவியாய் தவிக்கும் சல்வார்பட்டி மக்கள்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சாத்துார் : -20 ஆண்டுகளாக உடைந்து கிடக்கும் வைப்பாறுபாலத்தை சரிசெய்யாமல் விட்டதால் சல்வார்பட்டி ஊராட்சி மக்கள் படாதபாடு படுகின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இவ்ஊராட்சியில்இரவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், அச்சங்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.இங்குள்ளோர் அடிப்படை வசதிகளான ரோடு, சாக்கடை , குடிநீர் வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது. இ.சேவை மையம், சுகாதார

சாத்துார் : -20 ஆண்டுகளாக உடைந்து கிடக்கும் வைப்பாறுபாலத்தை சரிசெய்யாமல் விட்டதால் சல்வார்பட்டி ஊராட்சி மக்கள் படாதபாடு படுகின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இவ்ஊராட்சியில்இரவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், அச்சங்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.இங்குள்ளோர் அடிப்படை வசதிகளான ரோடு, சாக்கடை , குடிநீர் வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது. இ.சேவை மையம், சுகாதார வளாகம், நுாலக கட்டடம் , ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வராது காட்சி பொருளாக உள்ளன.

பொது சுகாதார வளாகங்கள் சேதமடைந்து கதவுகள் உடைந்து காணப்படுவதால், ஆற்றங்கரை,ரோட்டின் ஒரங்கள் திறந்த வெளி கழிப்பிடமாக மாறி வருகின்றன. இதனால் சுகாதாரக்கேடுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.சேதுராமலிங்கபுரத்தில் மயானம் செல்ல ரோடு வசதியில்லை. குறுகிய பாதையில் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. ஊராட்சியில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வருகிறது. இதுவும் குறைந்தளவு வருவதால் மக்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்து கின்றனர்.

ஊரை சுற்றிலும் விவசாய நிலங்களில் முள்செடிகள் தான் அதிகளவில் வளர்ந்துள்ளன.பட்டாசு தயாரிப்பும் கரிமூட்டம் தொழில்தான் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் விவசாயம் மேம்பட அரசு நிதி ஒதுக்கிட வேண்டும். சவரோடையிலும், வைப்பாற்றிலும் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

இடிந்து போன வைப்பாறு பாலம்

சரவணகுமார், விவசாயி: சல்வார்பட்டி ஊராட்சியில் இருந்து அச்சங்குளம் ,ஏழாயிரம்பண்ணை , கோவில்பட்டி செல்ல வசதியாக வைப்பாற்றில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இப் பாலம் இடிந்து 20 ஆண்டாகிறது . இதை சீரமைத்து தந்தால் சிவகாசி - கோவில்பட்டிக்கு புதிய வழித்தடம் கிடைக்கும். தற்போது பாலம் உடைந்து கிடப்பதால் ஆற்றுக்குள் இறங்கி வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேண்டும் நிழற்குடை

கணேசன், ஊராட்சி துணைத் தலைவர்: ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை இல்லை. வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெளியூர் சென்று வருகின்றனர். வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. ஜல் ஜீவன் சக்தி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.சேதுராமலிங்கபுரம் கிராமத்திற்கு மயான கரை செல்ல ரோடு வசதி தேவை. அச்சங்குளத்தில் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும்.

தேவை குடிநீர் கிணறு

தமிழ்ச் செல்வி, ஒன்றிய கவுன்சிலர்: வைப்பாறு மானுார் கூட்டுக் குடிநீர் திட்டங்களே மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.மழைக்காலத்திலும் கோடைக் காலத்திலும் இத்திட்டத்தின் கீழ் வரும் தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை .மிக குறைந்த அளவு தண்ணீரே ஊராட்சிக்கு வருகிறது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சவர் ஒடையில் திறந்தவெளி குடிநீர் கிணறு அமைப்பதன் மூலம் ஊராட்சி மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். ஒன்றிய கவுன்சிலர் நிதியில் இருந்து சேதுராமலிங்கபுரத்திற்கு ரோடு வசதி செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளேன்.

நடவடிக்கை எடுக்கப்படும்

முத்துவீரி, ஊராட்சி தலைவர்: ஊராட்சியில் 24 நபர்களுக்கு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சல்வார் பட்டியில் மேல்நிலைகுடிநீர் தொட்டி 30, ஆயிரம் லிட்டர் கட்டவும், சேதுராமலிங்கபுரம் கிராமத்திற்கு மயான கரைக்கு ரோடு அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி பி.டி.ஒ., கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்துள்ளேன். ஒரு ஏக்கரில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பழமரங்கள் வளர்க்க கலெக்டர் மேகநாதரெட்டி ஆணை பிறப்பித்துள்ளார். விரைவில் பணிகள் துவக்கப்படும். 100 நாள் வேலை செய்ய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

தேவையான நிதி பெற்று தர நடவடிக்கை

பஞ்சவர்ணம் கணேசன், ஒன்றிய தலைவர், வெம்பக்கோட்டை: ஒவ்வொரு ஊராட்சியின் வளர்ச்சிக்கும் தேவையான நிதியை பெற்றுத்தர முழு முயற்சி எடுக்கப்படும். கொரோனா தொற்று காரணமாக நிதி பெறுவதில் சிக்கல் இருந்தது. இனிமேல் முழுமையாக நிதி வரும் என எதிர்பார்க்கிறோம். ஒன்றிய கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X