பொது செய்தி

இந்தியா

கோர்ட் வளாகத்தில் கோவில் மாவட்ட நீதிபதி விசாரணை

Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் கோர்ட் வளாகத்தில் விநாயகர் கோவிலை அகற்றுவது குறித்து, மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 2017ல், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அனுமதி இன்றி கோவில் கட்டியதற்கு வழக்கறிஞர்கள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், தாதாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம்,

திண்டிவனம் : திண்டிவனம் கோர்ட் வளாகத்தில் விநாயகர் கோவிலை அகற்றுவது குறித்து, மாவட்ட நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 2017ல், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அனுமதி இன்றி கோவில் கட்டியதற்கு வழக்கறிஞர்கள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், தாதாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஐகோர்ட் பதிவாளருக்கு 2017 பிப். 8ல் புகார் அனுப்பியிருந்தார். அதில் அனுமதியில்லாமல் நிறுவப்பட்டுள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என கூறியிருந்தார். வழக்கறிஞர்களுக்குள் மோதல் சூழல் ஏற்பட்டதால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் பூட்டப்பட்டது.சில தினங்களுக்கு முன், ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி திண்டிவனம் கோர்ட்டிற்கு வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்.இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில், நேற்று மாலை மாவட்ட அமர்வு நீதிபதிஇளவழகன், நேரில் விசாரணை நடத்தினார்.இதில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தநிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒரு மாதத்திற்குள் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை வேறு இடத்தில் வைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்என வழக்கறிஞர்களிடம் கூறினார்.இதற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாராயணன் தரப்பில், செஞ்சி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் கோவில்கள் உள்ளது. மேலும் நீதிமன்றத்தில், நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளதால் விநாயகர் கோவிலை அகற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.அட்வகேட் அசோசியேஷன் விஜயன் தரப்பினர், நீதிமன்ற உத்தரவிற்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
07-செப்-202107:58:34 IST Report Abuse
R.RAMACHANDRAN நீதி மன்றங்களை கோயில்களாக மதிக்காமல் பொய்யும் புரட்டும் செய்பவர்களுக்கு கோயில் கல்லினால் ஆன சிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X