கட்டி 13 ஆண்டுகளாச்சு... பாழாகும் வணிக வளாகம்; அதிகாரிகள் அலட்சியத்தால் சீரழிகிறது சிவகாசி நகரின் சுகாதாரம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சிவகாசி : நவீன இறைச்சி கூடம், வணிக வளாகம் கட்டப்பட்டு 13 ஆண்டுகளாகியும் பயன்பாட்டில் இல்லாததால் அரசு நிதி வீணாகிறது. இவைகள் பயன்பாட்டில் இல்லாததால் இறைச்சிகள் நகருக்குள் வெட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை கருதி வணிக வளாக கட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.சிவகாசி நகரில் ஆடு, மாடு, கோழி , மீன் உள்ளிட்ட இறைச்சிகளை, குடியிருப்பு பகுதி, மக்கள்

சிவகாசி : நவீன இறைச்சி கூடம், வணிக வளாகம் கட்டப்பட்டு 13 ஆண்டுகளாகியும் பயன்பாட்டில் இல்லாததால் அரசு நிதி வீணாகிறது. இவைகள் பயன்பாட்டில் இல்லாததால் இறைச்சிகள் நகருக்குள் வெட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை கருதி வணிக வளாக கட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சிவகாசி நகரில் ஆடு, மாடு, கோழி , மீன் உள்ளிட்ட இறைச்சிகளை, குடியிருப்பு பகுதி, மக்கள் நடமாடும் பகுதி, திறந்த வெளியில் வெட்டி நகரை மாசுபடுத்தி வந்தனர் இறைச்சி வியாபாரிகள். சிவகாசி நகரை துாய்மைப்படுத்தும் நோக்கில் விஸ்வநத்தம் ரோட்டில் நவீன இறைச்சி கூடம், இறைச்சியை விற்பனை செய்ய வணிக வளாகத்தில் 126 கடைகளும் நகராட்சி சார்பில் கட்டப்பட்டது.

இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டது. மக்களும் வேறு எங்கும் இறைச்சிக்காக அலையாமல் ஒரே இடத்தில் வாங்கி பயன்பெற வசதி செய்யப்பட்டது. கட்டப்பட்ட சில நாட்கள் மட்டுமே கண்துடைப்பாக செயல்பட்ட இவைகள், அதன் பின் செயல்படவில்லை.கட்டடங்கள் செயல்படாத நிலையில் இங்கு 2009 ல் ரூ. 50 லட்சம் செலவில் ரோடு வசதி ஏற்படுத்தப்பட்டது.

தற்போது அந்த பணமும் வீணாகி விட்டது. கட்டப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் அவைகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. மேலும் இப்பகுதி கட்டடங்கள் 'பாராகவும்' சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விட்டது. கட்டங்களை சுற்றி முட்புதர்கள் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் இருப்பிடமாகவும் உள்ள து. கட்டடங்கள் செயல்படாததால் நகரில் பல்வேறு இடங்களில் ஆடு, மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிகள் வெட்டப்பட்டு வருகிறது.

இதன் கழிவுகள் முறையாக வெளியில் சென்று கொட்டுவதில்லை. ஆங்காங்கே வீசி விட்டு சென்று விடுகின்றனர். இக்கழிவுகளை நாய், மாடுகள் தங்கள் உணவுக்காக கிளற சுற்றுப்புறமும் சுகாதாரக்கேடால் சீரழிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X