பாக்., தலையீடு இருக்காது; தலிபான்கள் திட்டவட்டம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
இஸ்லாமாபாத்-'பாக்., உட்பட எந்த நாடும், எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்' என, தலிபான் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நம் அண்டை நாடான பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர் பயஸ் ஹமீது

இஸ்லாமாபாத்-'பாக்., உட்பட எந்த நாடும், எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்' என, தலிபான் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



latest tamil news


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நம் அண்டை நாடான பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தலைவர் பயஸ் ஹமீது சமீபத்தில் காபூலுக்கு சென்றார்.

இதையடுத்து ஆப்கனில் புதிய அரசு அமைப்பதில், பாக்.,கின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது.குறிப்பாக, பாக்., ஆதரவு பெற்றுள்ள ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை புதிய அரசில் சேர்க்க நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. தலிபான் அழைப்பை ஏற்று அவர் காபூல் சென்றதாக, பாக்., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் நேற்று கூறியதாவது:ஆப்கனின் உள்நாட்டு விவகாரத்தில் பாக்., உட்பட எந்த நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம். இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவதற்காக பாக்., சார்பில் பயஸ் ஹமீது வந்தார். எங்கள் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.


latest tamil news


இரு நாட்டு எல்லையில் பயணியரை அனுமதிப்பது குறித்தும், வர்த்தகத்தை தொடர்வது குறித்தும் பேச விரும்புவதாக பாக்., கூறியது. அதன்படி, பாக்., குழு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத நடவடிக்கைகள் நடப்பதற்கு எங்களுடைய நிலத்தை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியையும் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
07-செப்-202116:21:32 IST Report Abuse
DVRR அப்போ எதுக்குங்க ஒங்க ரெண்டு கோஷ்டி யார் தலைமை வகிப்பது என்று அதற்குள் காயம் அடைந்தார் பராதர்??வேடிக்கை என்னவென்றால் உங்கள் இரு கோஷ்டி சண்டையை தீர்த்து வைக்க பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் வருகை காபூலில். அந்த ஓட்டலை உங்கள் இன்னொரு கோஷ்டி முற்றுகை. நீங்கள் தான் உண்மையான மூர்க்கங்கள் இந்த உலகத்திலேயே.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
07-செப்-202114:05:26 IST Report Abuse
Rpalnivelu ரஷ்யவாலும் அமெரிக்காவாலும் முடியாததை சீனா முடித்துக் காட்டும், எப்படி, கடன் கொடுத்தே நாட்டை கபளீகரம் செய்துவிடுவார்கள்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
07-செப்-202112:14:51 IST Report Abuse
Anand ஆமாம், ஆப்கானிஸ்தான் வேறு பாகிஸ்தான் வேறு என்பது கிடையாது, இரண்டு தீவிரவாத கூட்டமும் ஒன்றாகிவிட்டது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X