பொது செய்தி

இந்தியா

பெலகாவி மாநகராட்சியில் பாஜ., வெற்றி

Added : செப் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு, : கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, பெலகாவி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது. எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், கலபுரகியில் ம.ஜ.த., ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ், பா.ஜ.,வும்; ஹுப்பள்ளி - தார்வாடில் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, பா.ஜ.,வும் தந்திரம் வகுத்து வருகிறது.பதவிக்காலம் நிறைவடைந்த பெலகாவி மாநகராட்சியில் 58 வார்டுகள்;

பெங்களூரு, : கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, பெலகாவி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.

எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், கலபுரகியில் ம.ஜ.த., ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ், பா.ஜ.,வும்; ஹுப்பள்ளி - தார்வாடில் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, பா.ஜ.,வும் தந்திரம் வகுத்து வருகிறது.பதவிக்காலம் நிறைவடைந்த பெலகாவி மாநகராட்சியில் 58 வார்டுகள்; ஹுப்பள்ளி - தார்வாட் மாநகராட்சியில் 82 வார்டுகள்; கலபுரகி மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும் கடந்த 3ல் ஓட்டுப்பதிவு நடந்தது.அனுமதிமூன்று மாநகராட்சிகளிலும் சேர்த்து, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆம் ஆத்மி, உத்தம பிரஜாகீயா, ஏ.ஐ.எம்.ஐ.எம்., - எஸ்.டி.பி.ஐ., - எம்.இ.எஸ்., கர்நாடக ராஷ்ட்ரீய சமிதி, கர்நாடக சிவசேனை, கர்நாடகா ஜன சேவா கட்சிகள் மற்றும் சுயேச்சை என 1,105 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.பெலகாவியில் 50.41 சதவீதம்; ஹுப்பள்ளி - தார்வாடில் 53.81 சதவீதம்; கலபுரகியில் 49.40 சதவீதம் ஓட்டுகளும் பதிவாகின.பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8:00 மணிக்கு ஆரம்பமானது. தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே, ஓட்டு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுகளை எண்ண 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தன.பெரும்பான்மைபெலகாவியில் ஆரம்ப சுற்று முதலே, பா.ஜ., முன்னிலை வகித்தது. கடந்த நான்கு முறையும், எம்.இ.எஸ்., கட்சி தான் ஆட்சி அமைத்தது. எனவே, இம்முறை கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.மொத்தமுள்ள 58 வார்டுகளில், பா.ஜ., 35 வார்டுகளில் வென்று, முதல் முறையாக பெலகாவி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் - 10, ஏ.ஐ.எம்.ஐ.எம்., - ஒன்று, மற்றவை - 12 இடங்களில் வென்றன. மராத்தியர்களின் ஓட்டுகளை பெறுவதில் பா.ஜ., வகுத்த தந்திரம் கைகொடுத்துள்ளது.ஹுப்பள்ளி - தார்வாடின் 82 வார்டுகளில், 39 வார்டுகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் - 33, ம.ஜ.த., - 1, ஏ.ஐ.எம்.ஐ.எம்., - மூன்று, மற்றவை - ஆறு இடங்களில் வென்றன. முழு பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களில் யாரும் வெற்றி பெறாததால் இழுபறி நீடித்துள்ளது.ஈடுபாடுஎனவே, சுயேச்சை மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களுடன், பா.ஜ., ஆட்சி அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுஉள்ளது.மற்றொரு புறம் கலபுரகியின் 55 வார்டுகளில், 27 வார்டுகளில் வென்று, தனி பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. பா.ஜ., - 23, ம.ஜ.த., - நான்கு, மற்றவை - ஒன்று இடங்களில் வென்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 28 வார்டுகளில், எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை.இதனால், தனி பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்திருந்தாலும், ம.ஜ.த., ஆதரவுடன் ஆட்சி அமைக்க யோசிக்கிறது. ஆனால், ம.ஜ.த.,வின் ஆதரவை பெறுவதற்கு, அக்கட்சி முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசித்தார்.ஒற்றுமைஅவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.பெலகாவியில் எதிர்பாராத வெற்றி, பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும், தங்கள் இரும்பு கோட்டை என்று கருதப்படும் ஹுப்பள்ளி - தார்வாடில், முழு பெரும்பான்மை கிடைக்காததன் பின்னணி என்ன என்பது குறித்து அக்கட்சி தலைவர்கள் ஆராய்கின்றனர்.கலபுரகியில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்ச வார்டுகளில் வென்றிருப்பது, பா.ஜ.,வுக்கு சமாதானத்தை தந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றுமையால் தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.ஆதரவுஎதிர்பார்த்தபடி ம.ஜ.த.,வுக்கு அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. கலபுரகியில் மட்டும் ம.ஜ.த., ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாத வகையில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.''06.09.2021 / செய்தி: அர்வின்குமார்: 6:45 / MD: 6:47*7_DMR_0018மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் பா.ஜ., வென்றதால், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அக்கட்சி தொண்டர்கள் இனிப்பு ஊட்டினர். இடம்: மாவட்ட பா.ஜ., அலுவலகம், ஹுப்பள்ளி.7_DMR_0019ஓட்டு எண்ணும் மையத்தின் வெளியே, கட்சி கொடிகளோடு உற்சாகமுடன் காணப்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள். இடம்: என்.வி.பள்ளி, கலபுரகி.------------------------------------------------பெலகாவி மாநகராட்சியில் பா.ஜ., முதல் முறையாக வெற்றிகலபுரகியில் இழுபறி; ஹுப்பள்ளி - தார்வாடில் தாமரைக்கு வாய்ப்புபிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்த அபிவிருத்தி பணியை நினைத்து மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். வெற்றிக்கு காரணமான தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.பசவராஜ் பொம்மை, முதல்வர்பெலகாவியில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக் கொள்கிறோம். ஹுப்பள்ளி - தார்வாட், கலபுரகியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்திய அமைச்சர், முதல்வர் பணியாற்றியதால், ஹுப்பள்ளி - தார்வாடில் காங்கிரசுக்கு அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X