தமிழ்நாடு

கிராம நிர்வாக விஷயத்தில் கணவர் தலையீடு இருந்தால்... உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் கணவர், உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அனீஷ்சேகர் எச்சரித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பாக நிர்வாகம் நடக்கிறது. இருப்பினும் சில ஊராட்சி ஒன்றியங்கள், பல கிராம ஊராட்சிகளில் பெண்

மதுரை : மதுரை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் கணவர், உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அனீஷ்சேகர் எச்சரித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பாக நிர்வாகம் நடக்கிறது. இருப்பினும் சில ஊராட்சி ஒன்றியங்கள், பல கிராம ஊராட்சிகளில் பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் தலையீடு இருப்பது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் மாண்பை கெடுப்பதாக உள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாக பெண்கள் உள்ளனர்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ல் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள், உறுப்பினர்களின் அதிகாரங்கள், கடமைகள், பொறுப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சிகளை பொருத்தவரையில் தலைவர் என்பவர் அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் என்ற பொறுப்பையும், கவனிக்க அதிகாரம் உள்ளது. ஊராட்சி நிதி நிர்வாக செயல்பாடுகளில் நேரடியாக தலையிட அதிகாரம் வழங்கப்பட்டுஉள்ளது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய தலைவர்களுக்கு இதுபோன்ற அதிகாரம் வழங்கப்படவில்லை.சில ஊராட்சிகளில் பெண் பிரதிநிதிகளின் கணவர்,மகன், சகோதரர், தந்தை அல்லது இதர உறவினர்கள் கிராம நிர்வாக விஷயத்தில் அதிகளவில்குறுக்கிடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. நிதி நிர்வாகத்தில் கூட தலையிடுவதாக புகார் வருகிறது.

இவை சட்டத்திற்கு புறம்பானவை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட சுய அதிகார பகிர்வுகளை அவமதிப்பதாகும்.இனி ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் கணவர் அல்லது உறவினர்கள் கலந்து கொண்டு நிரூப்பிக்கப்படும் கூட்டங்கள், இதர குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ரத்து செய்ய உத்தரவிடப்படும்.

இம்முறைகேடு தொடர்ந்து நடந்தால் அதற்கு இடமளிக்கும் பெண் பிரதிநிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதை கண்காணிக்க கிராம ஊராட்சிகளுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரும், மாவட்ட ஊராட்சிக்கு மாவட்ட ஊராட்சி செயலாளரும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X