பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.500 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு; கலெக்டர்

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை : இந்தாண்டு பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.500 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மதுரையில் கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.இதுகுறித்து கல்வி, வங்கி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. எம்.பி., வெங்கடேசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி அபிதா ஹனிப், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், முன்னோடி வங்கி மேலாளர் அனில்

மதுரை : இந்தாண்டு பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.500 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மதுரையில் கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து கல்வி, வங்கி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. எம்.பி., வெங்கடேசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி அபிதா ஹனிப், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், முன்னோடி வங்கி மேலாளர் அனில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வீட்டு கடன் குறித்து விளம்பரங்கள் செய்யப்படுவது போல, கல்வி கடன் குறித்தும் விளம்பரப்படுத்த வேண்டும். நியாயமான காரணமின்றி கல்விகடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது என எம்.பி., வலியுறுத்தினார்.

கலெக்டர் கூறியதாவது:பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்வது, கல்வி கடன் வழங்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி கடன் கோரி 630 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை ரூ.50 கோடி வரை கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தகவல்மையம் கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் துவங்கப்படவுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கல்வி, வங்கி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி கல்வி கடன் வழங்குவது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X