பொது செய்தி

தமிழ்நாடு

வி.எச்.பி., கண்டனம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் வேலுமணி வரவேற்றார். கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிர்வாகிகள் வேலுசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்செந்துார் முருகன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல்

மதுரை : மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் வேலுமணி வரவேற்றார். கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிர்வாகிகள் வேலுசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்செந்துார் முருகன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.வெள்ளி முதல் ஞாயிறு வரை வழிபாட்டு தலங்களை வழக்கம் போல திறக்க அரசு உத்தரவிட வேண்டும். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைக்க அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X