பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 07, 2021
Share
Advertisement
பூம்பூம் மாட்டுக்காரர்கள் முறையீடுமதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் குடுகுடுப்பைகாரர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் சமூக நலத்துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கினர். அவர்கள் கூறுகையில், 'நாங்கள் பழங்குடி நாடோடி சமூகத்தினர். அரசு எங்களுக்கு இலவச வீட்டு

பூம்பூம் மாட்டுக்காரர்கள் முறையீடு

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் குடுகுடுப்பைகாரர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் சமூக நலத்துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கினர். அவர்கள் கூறுகையில், 'நாங்கள் பழங்குடி நாடோடி சமூகத்தினர். அரசு எங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கியது. ஆனால் யாரும் வீடு கட்டுமளவு வசதியாக இல்லை. எனவே வழங்கப்பட்டுள்ள இடத்தில் வீடு கட்டி தர வேண்டும்' என்றனர்.

அலைபேசி டவருக்கு எதிர்ப்பு

நாகமலைபுதுக்கோட்டை குடியிருப்போர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சமூக நல அலுவலர் புகாரியிடம் தடாதகை அம்மன் கோயில் தெருவில் அலைபேசி டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். பின் அவர்கள் கூறியதாவது: தெருவில் 130 அடி உயரத்திற்கு அலைபேசி டவர் அமைக்க தனியார் தொலைதொடர்பு நிறுவனம் பூர்வாங்க பணிகளை துவக்கியுள்ளது. மக்கள் நெருக்கடியான பகுதியில் டவர் அமைப்பதால் இடையூறு ஏற்படும். டவரிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளால் முதியவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு அபாயம் உள்ளது. டவர் அமைப்பதை கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

ஹிந்து மக்கள் நல இயக்கம் மனு

ஹிந்து மக்கள் நல இயக்க தென் மண்டல தலைவர் சந்தகருப்பன்சுவாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ் பாரம்பரியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. அதன்படி இந்தாண்டும் ஹிந்து மக்கள் நல இயக்கம் சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

4.62 கோடி நிலம் ஆக்கிரமிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் அய்யங்காளை தலைமையில் நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் தாலுகா வாலானேந்தலில் ரூ.4.62 கோடிமதிப்பிலான அரசு பஞ்சமி நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: வாலானேந்தலில் நான்கு ஏக்கர் 62 சென்ட் நிலம் பஞ்சமி நிலம். 18 ஆண்டுகளாக அந்த நிலம் தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர்களிடம் உள்ளது. அதை மீட்க கலெக்டர் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது என்றனர்.

அங்கன்வாடிக்கு கட்டடம் தேவை

மதுரை மேலமாசி வீதி பா.ஜ., நிர்வாகி சரவணன் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், 'மேலவாசல் கழிவு நீரேற்று நிலையம் அருகே மாநகராட்சி பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆபத்தான நிலையில் ஆஸ்பெட்டாஷ் சீட் கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X