போலீஸ் செய்திகள்| Dinamalar

போலீஸ் செய்திகள்

Added : செப் 07, 2021
Share
லோடுமேன்களுக்கு கத்திக்குத்துமதுரை: செல்லுார் மணிகண்டன் 23, மேலத்தோப்பு பிரசாந்த் 24, கீழதோப்பு குமார் 34. மூவரும் நண்பர்கள். லோடுமேன்களான இவர்களுக்கும், பரவை மார்க்கெட்டில் லோடு இறக்குவது தொடர்பாக வளர்ராஜா, விஜி, ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோருக்கும் முன்விரோதம் உள்ளது. மாமூல் பிரச்னை காரணமாக மூவரையும் வளர்ராஜா உள்ளிட்டோர் குத்தியதாக மணிகண்டன்

லோடுமேன்களுக்கு கத்திக்குத்து

மதுரை: செல்லுார் மணிகண்டன் 23, மேலத்தோப்பு பிரசாந்த் 24, கீழதோப்பு குமார் 34. மூவரும் நண்பர்கள். லோடுமேன்களான இவர்களுக்கும், பரவை மார்க்கெட்டில் லோடு இறக்குவது தொடர்பாக வளர்ராஜா, விஜி, ரஞ்சித்குமார், சுந்தர் ஆகியோருக்கும் முன்விரோதம் உள்ளது. மாமூல் பிரச்னை காரணமாக மூவரையும் வளர்ராஜா உள்ளிட்டோர் குத்தியதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

விேஷசத்திற்கு வந்தவருக்கு குத்து

மதுரை: வண்டியூர் யோகமணிகண்டன் 22. இவர் மீது வழக்கு ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் விசேஷம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது அப்பகுதி விஜய் 22, கத்தியால் குத்தினார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூவருக்கு வெட்டு : ஒருவர் கைது

சோழவந்தான்: அய்யப்ப நாயக்கன்பட்டி ராஜேந்திரன் 55. பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவரது கடையிலிருந்து பழைய இரும்பை திருடியது தொடர்பாக அதேபகுதி டேனியலுடன் 29, தகராறு ஏற்பட்டது. ராஜேந்திரன், அவரது தங்கை பத்திரகாளி, தம்பி கந்தசாமியை அரிவாளால் டேனியல் தாக்கி காயப்படுத்தினார். போலீசார் கைது செய்தனர்.

ஆடு திருடியவர் கைது

மேலுார்: கிடாரிப்பட்டி ராணி 40. நேற்று காலை அழகர்கோவில் ரோட்டில் ஆடு மேய்த்த போது டூவீலரில் வந்த இருவர் ஆட்டுக் குட்டியைத் துாக்கிச் சென்றனர். ராணி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் டூவீலரை பின் தொடர்ந்து சென்று பிடித்து மேலவளவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அலங்காநல்லுார் பெரிய ஊர் சேரி அபிமன்யு 21, என்பது தெரிந்தது. போலீசார் கைது செய்தனர்.

பல்கலை ஊழியர் தற்கொலை

நாகமலை புதுக்கோட்டை: மேலக்குயில்குடி ஆதிசிவன் நகர் மாயாண்டி 52. மதுரை காமராஜர் பல்கலை தற்காலிக ஊழியர். இவரது மகள் பிரியங்கா சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தியுடன் காணப்பட்ட மாயாண்டி, நேற்று அப்பகுதி மின் கோபுரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவ வீரர் கைது

பேரையூர்: பேரையூர் ஜவஹர்தெரு ராஜேஷ்கண்ணன் 30. ராணுவ வீரர். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் நேற்று திருமங்கலத்திலிருந்து பேரையூருக்கு அரசு பஸ்சில் வந்தார். டி.கல்லுபட்டி யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது ராஜேஷ்கண்ணன் தகராறு செய்து கண்டக்டர் முருகனை தாக்கினார். ராஜேஷ்கண்ணன் கைது செய்யப்பட்டார்.

டூவீலர் மோதி ஒருவர் பலி

பேரையூர்: கோபிநாயக்கன்பட்டி பச்சையம்மாள் 60. நேற்று அதே ஊரில் ரோட்டை கடக்கும் போது டூவீலரில் வந்த அதே ஊரை சேர்ந்த பாண்டி (ஹெல்மெட் அணியவில்லை) மோதினார். இதில் பச்சையம்மாள் இறந்தார். பாண்டி காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X