பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஆசிரியர் தினவிழா

Added : செப் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை கல்லுாரியில் வாரிய தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது.முன்னாள் பேராசிரியர் ராமன் கல்லுாரி மேம்பாட்டிற்காக ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.கல்லுாரி வாரிய துணைத் தலைவர் சீத்தாராமன், செயலாளர் நடனகோபால், பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், இயக்குனர் ரமேஷ், முதல்வர் சுரேஷ், பேராசிரியர் சூரிய நாராயணன், முன்னாள் பேராசிரியர்கள், வாரிய உறுப்பினர்கள்

மதுரை : மதுரை கல்லுாரியில் வாரிய தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது.

முன்னாள் பேராசிரியர் ராமன் கல்லுாரி மேம்பாட்டிற்காக ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.கல்லுாரி வாரிய துணைத் தலைவர் சீத்தாராமன், செயலாளர் நடனகோபால், பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், இயக்குனர் ரமேஷ், முதல்வர் சுரேஷ், பேராசிரியர் சூரிய நாராயணன், முன்னாள் பேராசிரியர்கள், வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மதுரை தெலுங்கு பிராமண அசோசியேஷன் சார்பில் குருகுலம் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் லட்சுமி காந்தன், பாலகுருநாதன், வெங்கட்ராமன், இல.அமுதன், சுவாமிநாதன், வெங்கடேசன், சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், பிச்சுமணி பங்கேற்றனர். லட்சுமி, சாவித்திரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

மதுரை கேப்ரன்ஹால் பெண்கள் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமையாசிரியர் பார்ச்சூன் பொன்மலர் ராணி தலைமை வகித்தார். தாளாளர் அருஸ்தாஸ் ஆசிரியைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். உதவி தலைமையாசிரியர்கள் ஷகீலா, ஜூலியட், ஜான்ஸிராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருமங்கலம்பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா, கல்லுாரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. பி.கே.என்., வித்யாலயா சங்க கமிட்டி தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் பூமண்டலம், பொருளாளர் தனபாலன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் கணேசன் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி வளர்ச்சி குழு உறுப்பினர் சந்திரசேகரன் பேசினார். பேராசியர் நாகலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X