தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 76 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள்

Added : செப் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு 76 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 9 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திற்கு 76 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 9 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் என 182 இடங்களில் தினமும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது 3ம் அலை எச்சரிக்கை விடுத்த நிலையில் 2ம் தவணை செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்காக நேற்று முன்தினம் 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இவை மாவட்ட வாரியாக பிரித்தனுப்பப்பட்டது. திண்டுக்கல் சுகாதார மாவட்டத்திற்கு 50 ஆயிரம், பழநிக்கு 26 ஆயிரத்து 500 என மொத்தம் 76 ஆயிரத்து 500 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து, நேற்று வந்தடைந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X