பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும்' என, மாவட்ட இளைஞரணித் தலைவர் மோகன்குமார் தலைமையில் ஹிந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பது: புதுச்சேரி, தெலுங்கானா, கர்நாடகாவில் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உத்தரவு அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் எந்த தடையுமின்றி சதுர்த்தி

திண்டுக்கல் : 'கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும்' என, மாவட்ட இளைஞரணித் தலைவர் மோகன்குமார் தலைமையில் ஹிந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பது: புதுச்சேரி, தெலுங்கானா, கர்நாடகாவில் கொரோனா விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உத்தரவு அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் எந்த தடையுமின்றி சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும்.திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

வெள்ளையர்கள் காலத்தில் அமைத்த உயரமான சுவர் கடிகாரத்தை வியாபார தலமாக மாற்றி விட்டனர். இதை நீக்கி மக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி இடத்தை மீட்டு போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X