பொது செய்தி

தமிழ்நாடு

கட்டணமில்லா முடிகாணிக்கை; பழநி பக்தர்கள் மகிழ்ச்சி

Added : செப் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பழநி : பழநி கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் நேற்று முதல் கட்டணமில்லா முடி சீட்டு வழங்கப்படுகிறது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சரவணப் பொய்கை, கிரி வீதியில் குடமுழுக்கு அரங்கம் அருகே, வின்ச் ஸ்டேஷன் அருகே உட்பட முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் உள்ளன. விசேஷ நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் வெளியூர், உள்ளூர் பக்தர்கள்
 கட்டணமில்லா முடிகாணிக்கை; பழநி பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி : பழநி கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் நேற்று முதல் கட்டணமில்லா முடி சீட்டு வழங்கப்படுகிறது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சரவணப் பொய்கை, கிரி வீதியில் குடமுழுக்கு அரங்கம் அருகே, வின்ச் ஸ்டேஷன் அருகே உட்பட முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் உள்ளன. விசேஷ நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் வெளியூர், உள்ளூர் பக்தர்கள் மலைக் கோயில், திருஆவினன்குடி முருகனுக்கு முடி காணிக்கையை நேர்த்திக்கடனாக வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று பக்தர்களிடம் முடி காணிக்கை வசூலிக்கவில்லை.வழக்கமாக முடி காணிக்கைக்கு ரூ.30 கட்டணமாக கோயில் சார்பில் வழங்கப்படும் சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

தற்போது கட்டணமில்லா முடி சீட்டு எனக் குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் பக்தர்கள் சிலரிடம் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி 'டிப்ஸ்' பெறுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். பழநி கோயில் நிர்வாகம் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-202106:52:43 IST Report Abuse
Mannandhai some party man will take contract for collection of hair.
Rate this:
Cancel
08-செப்-202104:17:53 IST Report Abuse
ராஜா பழனியாண்டவர் சொத்து அரோகரா!
Rate this:
Cancel
07-செப்-202116:14:22 IST Report Abuse
அப்புசாமி ஓசியில் எதைக் குடுத்தாலும் மக்கள் மகிழ்ச்சி. மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை வெச்சு, ஆட்டையப் போடும் புது ஸ்கீம் இதுன்னு எப்போ மக்களுக்குப் புரியப் போகுதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X