பொது செய்தி

தமிழ்நாடு

பழநி வணிகர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பழநி : பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலகம் திறப்பு, பதவி ஏற்பு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது.தமிழக வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார். நகர தலைவர் ஜெயம் சரவணன் வரவேற்றார்.சுற்றுலா தலமான பழநியில் வையாபுரி குளத்தை தூர்வாரி படகுத்துறை அமைக்க வேண்டும். பழநி -- ஈரோடு அகல ரயில் பாதை திட்டத்தை

பழநி : பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலகம் திறப்பு, பதவி ஏற்பு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது.

தமிழக வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார். நகர தலைவர் ஜெயம் சரவணன் வரவேற்றார்.சுற்றுலா தலமான பழநியில் வையாபுரி குளத்தை தூர்வாரி படகுத்துறை அமைக்க வேண்டும். பழநி -- ஈரோடு அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். கொடைக்கானல் - -பழநி இடையே 'ரோப்கார்' திட்டம் செயல்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனையில் நவீன வசதியுடன் புதிய கட்டடங்கள் அமைக்க வேண்டும். பழநியாண்டவர் பல்கலை, மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். நகராட்சி, கோயிலுக்கு சொந்தமான கடைகளில் கொரோனா காலத்திற்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், வணிகர் சங்க கவுரவத் தலைவர் ஹரிஹர முத்தையர், கந்தவிலாஸ் பாஸ்கரன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ரகுமத்துல்லா, வேணுகோபால், கவுரவ ஆலோசகர்கள் சம்பத், பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் கண்ணுசாமி, துணை செயலாளர் ரம்யாகிருஷ்ணன், நிர்வாகி செல்வம், செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ, வருத்தமில்லா வாலிபர் சங்கம் மதனம் பங்கேற்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X