தமிழ்நாடு

பயிர்க்கடன் வழங்காமல் கோவை விவசாயிகளை... அலைய விடுறாங்க! விண்ணப்பம் பெறவே மறுப்பதாக குற்றச்சாட்டு

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021
Share
Advertisement
கோவை:விவசாய நிலங்களில் விதைப்புக்கு ஏற்ற சீதோஷ்ணம் நிலவி வரும் சூழலில், தோட்டக்கலைப்பயிர்களை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கிகள், பயிர்க்கடன் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன.இந்த பருவத்தில் தோட்டக்கலைத்துறை பயிர்களை விதைப்பு செய்தால், 45 முதல் 60 நாட்களில் பயிரை எளிதாக அறுவடை செய்து வருவாய் ஈட்டலாம்.அதற்கு ஆதாரம் விதை,
 பயிர்க்கடன் வழங்காமல் கோவை விவசாயிகளை... அலைய விடுறாங்க! விண்ணப்பம் பெறவே மறுப்பதாக குற்றச்சாட்டு

கோவை:விவசாய நிலங்களில் விதைப்புக்கு ஏற்ற சீதோஷ்ணம் நிலவி வரும் சூழலில், தோட்டக்கலைப்பயிர்களை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கூட்டுறவு வங்கிகள், பயிர்க்கடன் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன.

இந்த பருவத்தில் தோட்டக்கலைத்துறை பயிர்களை விதைப்பு செய்தால், 45 முதல் 60 நாட்களில் பயிரை எளிதாக அறுவடை செய்து வருவாய் ஈட்டலாம்.அதற்கு ஆதாரம் விதை, பயிர் முளைப்பதற்கு தேவையான அடியுரம், இடுபொருட்கள், முளைப்புக்கு பின் மருந்து தெளிப்பது, அறுவடைக்கு பின்பு விளை பொருளை பாதுகாப்பது போன்றவை ஆகும்.
இதற்கு அடிப்படை ஆதாரமே, கூட்டுறவு வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன் தான்.வழக்கமாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் வங்கிகள் வாயிலாக, விவசாயிகளுக்கு பயிர் அறுவடை மற்றும் சாகுபடிக்கு முன்னதாக, விளைவிக்கப்படும் பயிருக்கான கடன் வழங்கப்படும்.

அதோடு, பயிருக்கான உரமும் மானிய விலையில், வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக வழங்கப்படும். பயிர்க்கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து பயிர்க்காப்பீடும் செய்யப்படும்.ஆனால் இந்த ஆண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க., அரசு, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனால் தற்போதைய அரசு நடப்பு சீசனுக்கானபயிர் கடன் விண்ணப்பங்களையேபெறவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிச்சாமி கூறியதாவது:விவசாய கூலியாட்களுக்கான கூலி, பல மடங்கு உயர்ந்துள்ளது. விதை, உரம், பூச்சிமருந்து விலையும் உயர்ந்துள்ளது.விவசாயிகள் பலரும் இடுபொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதற்கான பயிர்க்கடனும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுவதில்லை.

வங்கிகளில் பயிர்க்கடன் வழங்குவதற்கான ஆவணங்களும் பெற்றுக்கொள்ளாமல், பல்வேறு காரணங்களை சொல்லி திருப்பியனுப்புகின்றனர். விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்துப்போயுள்ளனர்.தமிழக அரசு கூட்டுறவுத்துறை வாயிலாக, விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடனை வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும். தமிழக அரசு உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கடன் மறுப்புக்கு காரணம் இதுதான்!

கடந்த ஆண்டு அடங்கல் சான்று பெற்ற விவசாயிகள், தற்போது என்ன பயிர் செய்யப்போகின்றனர், கடந்த ஆண்டு என்ன பயிர் செய்திருந்தனர் என்பது குறித்த தகவல்களை குறிப்பிட்டு, கிராம நிர்வாக அலுவலகம் வாயிலாக அடங்கல் சான்று வழங்கப்படும். அப்படி பெறும் சான்றில், கடந்த ஆண்டு தேதியிட்டு வழங்கப்படுகிறது. இதை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஏற்றுக்கொள்வதில்லை. வருவாய்த்துறையும் அதற்கு தகுந்தாற்போல், சான்று வழங்குவதை மாற்றிக்கொள்வதில்லை.

இதுவே பயிர்க்கடன் வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்கின்றனர் விவசாயிகள்.நிறைய மாற்றங்கள் வந்துள்ளனகோவை மாவட்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வழங்க, ஏற்கனவே இருந்த நடைமுறையில் நிறைய மாற்றங்களை அரசு செய்துள்ளது. அதற்கேற்ப, விவசாயிகள் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கேட்கும் ஆவணங்களையும் சான்றையும் சமர்ப்பிப்பதில்லை.
விவசாயிகள் அலைவதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அரசு விதித்துள்ள நடைமுறைப்படி நாங்கள் செயல்பட வேண்டும். அதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விவசாயிக்கும் பயிர்க்கடன் இல்லை என்றுகூட்டுறவு வங்கிகளிலோ கடன் சங்கங்களிலோ சொல்ல முடியாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X