பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்ட எதிர்ப்பு: இன்றும் பேச்சுவார்த்தை

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாம் மண்டலத்தில், சேகரமாகும் குப்பைகள், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையத்தில் உள்ள, பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.அம்மாபாளையம் பகுதி மக்கள், பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அவிநாசி தாசில்தாரிடம்,

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாம் மண்டலத்தில், சேகரமாகும் குப்பைகள், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையத்தில் உள்ள, பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.அம்மாபாளையம் பகுதி மக்கள், பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அவிநாசி தாசில்தாரிடம், மக்கள் மனு அளித்தனர்.குப்பை கொட்டுவதை நிறுத்தாவிட்டால், இன்று (7ம் தேதி), சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தனர். இதனால், மாநகராட்சி செயற்பொறியாளர் சபியுல்லா, முதலாம் மண்டல கமிஷனர் சுப்பிரமணியம், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், நேற்று மாலை, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, இன்று மாலை, இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதனால், போராட்டத்தை மக்கள் ஒத்திவைத்துள்ளனர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X