பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் கான்கிரீட் எதிர்ப்பு தெரிவித்து மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
கோவை:நீர்நிலைகளில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கலெக்டரிடம் மனு தரப்பட்டுள்ளது.நொய்யல் புனரமைப்பு திட்டப்படி கோவை மாவட்டத்தில் 18 தடுப்பணைகள், 22 குளங்களில் இருந்து வண்டல் மண் அகற்றும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கியுள்ளனர். இவற்றின் கரைகளை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதில் கான்கிரீட் கொண்டு நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும்

கோவை:நீர்நிலைகளில் கான்கிரீட் கரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கலெக்டரிடம் மனு தரப்பட்டுள்ளது.நொய்யல் புனரமைப்பு திட்டப்படி கோவை மாவட்டத்தில் 18 தடுப்பணைகள், 22 குளங்களில் இருந்து வண்டல் மண் அகற்றும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கியுள்ளனர். இவற்றின் கரைகளை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதில் கான்கிரீட் கொண்டு நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், கோவை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.அவர் கொடுத்த மனுவில், 'வெவ்வேறு வகை சிறு உயிரினங்கள், பறவைகளின் உறைவிடமாக கரையோர செடி, கொடிகள் இருக்கும். குளங்களில் கான்கிரீட் கரை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக மண் அரிப்பை தடுக்கும் தன்மை கொண்ட, உள்நாட்டு மரங்களை நடவு செய்யலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X