கோர்ட் செய்தி

தமிழ்நாடு

27 லட்சம் ரூபாய் இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி

Added : செப் 07, 2021
Share
Advertisement
கோவை:விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.ஆலாந்துறை அருகேயுள்ள கிலிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜா,26. கடந்த 2012, அக்., 23ல், தொண்டாமுத்துார், பூலுவபட்டி ரோட்டில் பைக்கில் சென்ற போது, அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

கோவை:விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.ஆலாந்துறை அருகேயுள்ள கிலிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜா,26. கடந்த 2012, அக்., 23ல், தொண்டாமுத்துார், பூலுவபட்டி ரோட்டில் பைக்கில் சென்ற போது, அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிமன்றம், ராஜா குடும்பத்திற்கு, 19.3 லட்சம் ரூபாய் வழங்க, 2019ல் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காமல் அரசு போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பு செய்தது. வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டு தொகை, 26.9 லட்சமாக அதிகரித்தது.அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, ரயில்வே ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டிருந்த தடம் எண்:11-டி, அரசு சொகுசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.மற்றொரு பஸ்இதே போல மற்றொரு இழப்பீடு வழக்கில், சேலம் செல்வதற்கு தயாராக இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்வதற்கு, கோர்ட் ஊழியர்கள் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றனர். டிரைவர், கண்டக்டர், பஸ்சை ஜப்தி செய்ய விடாமல் தடுத்தனர். அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், இழப்பீடு தொகையினை கோர்ட்டில் செலுத்தி விடுவதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கை விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X