40 அடி திட்டச்சாலை துணை கமிஷனர் ஆய்வு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

40 அடி திட்டச்சாலை துணை கமிஷனர் ஆய்வு

Added : செப் 07, 2021
Share
கோவை;பீளமேடு, எல்லைத்தோட்டம் பகுதியில், திட்டச்சாலை உருவாக்குவது தொடர்பாக, மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் ஆய்வு செய்தார்.கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பீளமேட்டில், வருங்கால வைப்பு நிதி அலுவலர்களுக்கு (பி.எப்.,) குடியிருப்பு கட்ட, 3.53 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அப்போது, 40 அடி திட்டச்சாலை அமைக்காமலும், வரைபட அனுமதி பெறாமலும். குடியிருப்பு

கோவை;பீளமேடு, எல்லைத்தோட்டம் பகுதியில், திட்டச்சாலை உருவாக்குவது தொடர்பாக, மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் ஆய்வு செய்தார்.கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பீளமேட்டில், வருங்கால வைப்பு நிதி அலுவலர்களுக்கு (பி.எப்.,) குடியிருப்பு கட்ட, 3.53 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அப்போது, 40 அடி திட்டச்சாலை அமைக்காமலும், வரைபட அனுமதி பெறாமலும். குடியிருப்பு கட்டப்பட்டது.திட்டச்சாலை உருவாக்கக்கோரி, 'பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பினர், 2010ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உத்தரவு பெற்றனர். தீர்ப்பளித்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், திட்டச்சாலை அமைக்காததால், மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகர ஊரமைப்பு துறை அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. இச்சூழலில், பி.எப்., அலுவலர் குடியிருப்பு வழியாக, 40 அடி திட்டச்சாலை அமைத்தால், பாலகுரு கார்டன் வழியாக எல்லைத்தோட்டம் சாலையை அடையலாம்.அதற்கு, தனியார் நிலத்தை கையகப்படுத்த, மாநகராட்சி துணை கமிஷனர் விமல்ராஜ் ஆய்வு செய்தார். வடக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில்பாஸ்கர், திட்டச்சாலை தொடர்பான தகவல்களை விளக்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X