பொது செய்தி

தமிழ்நாடு

'பாசி' வழக்கு விசாரணை துரிதபடுத்த நீதிபதி உத்தரவு

Added : செப் 07, 2021
Share
Advertisement
கோவை:பாசி நிறுவனம், 870 கோடி ரூபாய் மோசடி வழக்கில், விசாரணையை துரிதபடுத்தும் வகையில், தினசரி சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன்நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம், 870 கோடி ரூபாய் வசூலித்தது.ஆனால், வட்டியுடன் பணத்தை திருப்பி தராமல் மோசடி

கோவை:பாசி நிறுவனம், 870 கோடி ரூபாய் மோசடி வழக்கில், விசாரணையை துரிதபடுத்தும் வகையில், தினசரி சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன்நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம், 870 கோடி ரூபாய் வசூலித்தது.ஆனால், வட்டியுடன் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். இந்நிறுவன இயக்குனர்கள் கதிரவன், இவரது மகன் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர், 2011ல், கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.15 நாட்களுக்கு ஒரு முறை வாய்தா போடப்பட்டு, சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சி.பி.ஐ., தரப்பில், குறைந்த அளவிலான சாட்சிகளை மட்டும் அழைத்து வருவதால், விசாரணை தேக்கமடைந்து வருகிறது. இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாகியும், 860 பேரிடம் மட்டும் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.இதனால், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார். இனிமேல் வாரம் முழுவதும், தினசரி சாட்சிகளை கோர்ட்டிற்கு அழைத்து வரவும், முன்கூட்டியே சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். வரும் 17ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. தொடர்ந்து, 24 வரை சாட்சி விசாரணை நடைபெற உள்ளது. தினசரி 10 சாட்சிகளை ஆஜர்படுத்தும் வகையில், சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கதிரவன், கடந்த சில நாட்களுக்கு முன்நோய் பாதித்து இறந்தார். அதற்கான இறப்பு சான்றிதழை, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X