பொது செய்தி

தமிழ்நாடு

கழுகுகளை பாதுகாப்பது அவசியம்: விழிப்புணர்வு முகாமில் அறிவுரை

Added : செப் 07, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலை, மசினகுடி வனத்துறை சார்பில், உலக கழுகுகள் தினத்தை முன்னிட்டு, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. துணை இயக்குனர் அருண்குமார் தலைமை வகித்தார். ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், 'பாரு கழுகுகள் பாதுகாப்பதன் அவசியம்' குறித்து விளக்கினார். 'பாரு கழுகுகளை பாதுகாக்க தேவையான விழிப்புணர்வை மாணவர்களுக்கு

கூடலுார்:முதுமலை, மசினகுடி வனத்துறை சார்பில், உலக கழுகுகள் தினத்தை முன்னிட்டு, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. துணை இயக்குனர் அருண்குமார் தலைமை வகித்தார். ஊட்டி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், 'பாரு கழுகுகள் பாதுகாப்பதன் அவசியம்' குறித்து விளக்கினார். 'பாரு கழுகுகளை பாதுகாக்க தேவையான விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து, வனத்துறை, அருளகம் அறக்கட்டளை சார்பில், செம்மநத்தம், வாழை தோட்டம் பகுதிகளில், 'பாரு கழுகுகள் பாதுகாப்பு ' குறித்து, பொம்மலாட்டம், மிமிக்ரி, நாடகம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X