சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
கூடலுர்:முதுமலை, சிங்காரா வனப்பகுதியில் இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்ஹள்ளா வனப் பகுதிக்குள், அனுமதியின்றி சுற்றுலா பயணிகள் காரில் செல்வதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.வனச்சரகர் காந்தன் மற்றும் வன ஊழியர்கள், நேற்று முன்தினம், இரவு, 11:30 அப்பகுதியில், ஆய்வு

கூடலுர்:முதுமலை, சிங்காரா வனப்பகுதியில் இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்ஹள்ளா வனப் பகுதிக்குள், அனுமதியின்றி சுற்றுலா பயணிகள் காரில் செல்வதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.வனச்சரகர் காந்தன் மற்றும் வன ஊழியர்கள், நேற்று முன்தினம், இரவு, 11:30 அப்பகுதியில், ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, அனுமதியின்றி வனத்துக்குள் செல்ல முயன்ற காரை பறிமுதல் செய்து, அதில் பயணித்த ஈரோடு, பள்ளிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர், 25, சதீஷ், 27, ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், இவர்கள் மசினகுடி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கி, அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவுபடி, இருவருக்கும், 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராத தொகையை செலுத்தியதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X