கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரி கோடநாடு வழக்கு: இருவரிடம் நீண்ட விசாரணை

Added : செப் 07, 2021
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட, 10வது நபர் ஜித்தின்ஜாய் உறவினரிடம், தனிப்படைபோலீசார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றச்சாட்டப்பட்ட, 10வது நபரான ஜித்தின் ஜாய் உறவினரான சாஜி, 36வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், நீலகிரி

ஊட்டி:கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட, 10வது நபர் ஜித்தின்ஜாய் உறவினரிடம், தனிப்படைபோலீசார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றச்சாட்டப்பட்ட, 10வது நபரான ஜித்தின் ஜாய் உறவினரான சாஜி, 36வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத், ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர், சாஜி மற்றும் இவரின் நண்பர் கூடலுாரை சேர்ந்த ஹனீஷ் ஆகியோரிடம் காலை, 11:30 மணியிலிருந்து மாலை, 4:30 மணி வரை விசாரணை நடத்தி, வீடியோவில் பதிவு செய்தனர். அதில், கொலை நடத்த தினத்தில், கூடலுார் வழியாக கேரள சென்ற விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.எஸ்டேட்டில் டிரோன்...!கடந்த ஒரு வாரமாக, கோடநாடு எஸ்டேட் பங்களா, தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் மட்டும் மாலை மற்றும் இரவு நேரங்களில், 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பதாக, எஸ்டேட் மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், சோலுார்மட்டம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., முகமது ரபிக் தலைமையில் உள்ளூர் போலீசார், அவரிடம் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X