பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: தடுப்பூசி பொறுப்பு கைமாறியது

Added : செப் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கோவை மாவட்ட கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி, கொரோனா தடுப்பூசி போடும் பொறுப்பு, மீண்டும் சுகாதார துறையிடமே ஒப்படைக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களிலும், அனைத்து ஊராட்சிகளிலும், கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து, கொரோனா தடுப்பூசி போடும் பொறுப்பு, விபரங்களை 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றும் பணி, ஊராட்சி
 'தினமலர்' செய்தி எதிரொலி: தடுப்பூசி பொறுப்பு கைமாறியது

பொள்ளாச்சி:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கோவை மாவட்ட கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி, கொரோனா தடுப்பூசி போடும் பொறுப்பு, மீண்டும் சுகாதார துறையிடமே ஒப்படைக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களிலும், அனைத்து ஊராட்சிகளிலும், கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து, கொரோனா தடுப்பூசி போடும் பொறுப்பு, விபரங்களை 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றும் பணி, ஊராட்சி நிர்வாகங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.'முறையான பயிற்சி, அனுபவம் இன்றி மக்களுக்கு ஊசி செலுத்துவதால், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது; அதற்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும்' என, ஊராட்சி செயலாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 4ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் நேற்று முதல் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பு, மீண்டும் சுகாதார துறை வசமே ஒப்படைக்கப்பட்டு, அத்துறையின் செவிலியர்கள் வாயிலாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X