பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் நிரம்பியது பரம்பிக்குளம் அணை

Added : செப் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை நிரம்பி, மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்த கேரள வனப்பகுதியில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் பிரதான அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி உயரமும், 17.82 டி.எம்.சி., நீர் பிடிப்பு கொள்ளளவும் கொண்டது. வால்பாறை, பரம்பிக்குளம் வனப்பகுதியில் கனமழை பெய்வதால்,
 கனமழையால் நிரம்பியது பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள பரம்பிக்குளம் அணை நிரம்பி, மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்த கேரள வனப்பகுதியில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் பிரதான அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி உயரமும், 17.82 டி.எம்.சி., நீர் பிடிப்பு கொள்ளளவும் கொண்டது. வால்பாறை, பரம்பிக்குளம் வனப்பகுதியில் கனமழை பெய்வதால், பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நேற்று முன்தினம் இரவு, 71.75 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. முழு கொள்ளளவும் நிரம்பியதால், மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பரம்பிக்குளம் அணைக்கு, இன்று (நேற்று) காலை நிலவரப்படி, வினாடிக்கு, 2,352 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,085 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X