பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் 1 கோடி டோஸ்; மூன்றாம் முறையாக சாதனை

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி 'டோஸ்' என்ற எண்ணிக்கையை நாம் கடந்துள்ளோம்' என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவு: மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோசுக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
CovidVaccine, OneCrore Doses, LargestVaccinationDrive, India, கொரோனா, தடுப்பூசி, ஒரு கோடி, டோஸ், இந்தியா, சாதனை

புதுடில்லி: 'கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் கடந்த 11 நாட்களில் மூன்றாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி 'டோஸ்' என்ற எண்ணிக்கையை நாம் கடந்துள்ளோம்' என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவு: மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோசுக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக இந்த சாதனையை நாம் எட்டியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாம் மேற்கொண்டுள்ள தடுப்பூசி இயக்கப்பணிகள் மிகப்பெரிய உயரத்தை எட்டுகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



latest tamil news


இதன்படி நேற்று ஒரே நாளில் 1.05 கோடி டோசுக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.ஒட்டு மொத்தமாக நேற்று வரை 53.29 கோடி பேருக்கும் மேல் முதல் டோஸ் மற்றும் 16.39 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் 18 - 44 வயதிற்கு உட்பட்டோரில் 27.64 கோடி பேர் முதல் டோஸ் மற்றும் 3.57 கோடி பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
07-செப்-202109:36:13 IST Report Abuse
ஆனந்த் தொலைக்காட்சி விவாதங்களில் அரைவேக்காடு மருத்துவர்கள் மற்றும் விமர்சகர்கள் .. நம் நாட்டில் இந்த எண்ணிக்கையை அடைய வருட கணக்கில் ஆகும் என்றார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X