பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி வரும் 2022 ஜன., முதல் உயர்த்தப்படும் என 110வது விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:* அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜன., முதல் உயர்த்தப்படும். இதனால், 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.* அரசுக்கு 6,480 கோடி ரூபாய் கூடுதல் செலவு.* அரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி, சட்டசபை, 110வது விதி, முதல்வர், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி வரும் 2022 ஜன., முதல் உயர்த்தப்படும் என 110வது விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜன., முதல் உயர்த்தப்படும். இதனால், 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
* அரசுக்கு 6,480 கோடி ரூபாய் கூடுதல் செலவு.
* அரசு பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் மகன், மகள் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள்.
* ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியில் அமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்.
* சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்படும்.
* மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை.
* அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்படும்.
* அரசு பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
* கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும்.
* பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
* போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.
* ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.


latest tamil newsஇவ்வாறு அறிவிப்பில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
07-செப்-202122:26:59 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் விதி 110 இன் கீழ் ? அப்போ நோ சான்ஸ்
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
07-செப்-202120:53:53 IST Report Abuse
Nagercoil Suresh ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பும் நடத்தாமல், பணிக்கும் வராமல் இருந்த நாட்களில் பாதி நாட்களை வரும் ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் பணிகளை கொடுத்து ஈடு செய்ய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை அரசு வீணடிக்கக்கூடாது, பணிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்தவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தேவை தானா என ஸ்டாலின் அரசு சிந்திக்க வேண்டும்.. கொரோனா காலத்தில் அரசுக்கு இது வேண்டாத வேலை, கொடுக்கிற தெய்வம் இல்லாதவர்களிடமிருந்து எடுத்து இருப்பவர்களின் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்குமாம் அதே வேலையை அரசு செய்யக்கூடாது...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-செப்-202120:36:10 IST Report Abuse
RajanRajan லஞ்சத்தை எப்படி சட்டமாக்கணும் ? இலவசம் என்று சட்டம் போட்டுக்கணும். சம்பளத்தை எப்படி லஞ்சமாக்கணும்? அதெப்படி சம்பளமே லஞ்சம் சார்ந்த கிம்பளம் தானே. அண்ணே சூடா ரெண்டு தயிர் வடை கொடுங்க ? அடேய் நீ எந்த ஊர்லே இருந்ததா வர்ற ? திருவாரூர் அண்ணே. ஓடிப்போய்டுடா இங்கே இருந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X