அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரும் 13ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: அமைச்சர் தகவல்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ‛‛வரும் 13ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட 11 கட்சிகளுடன் நேற்று (செப்.,06) ஆலோசனை நடத்தியது. இதனால், விரைவில் தேர்தல் குறித்து
Tamilnadu, Local Body Elections, Anbarasan, Minister, தமிழகம், உள்ளாட்சி தேர்தல், அன்பரசன், அமைச்சர்

சென்னை: ‛‛வரும் 13ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்,'' என ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட 11 கட்சிகளுடன் நேற்று (செப்.,06) ஆலோசனை நடத்தியது. இதனால், விரைவில் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக தி.மு.க., அரசு பணியாற்றி வருகிறது.


latest tamil news


13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழனிசாமி ,ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகப்பை வீணாக்காமல், அதே புத்தகப்பையை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வருகிற 13-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க., அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
07-செப்-202115:06:13 IST Report Abuse
Hari டி மு க பதவிக்கு வரும்வரை கோர்ட் மூலம் உள்ளாச்சித்தேர்தல் நடக்காமல் செய்துவிட்டு இப்போது நடக்க அதே கோர்ட்டை தூண்டிய தி மு க க்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
பரதன். பாரதம். ஜெய் ஹிந்த். நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ஒழுச்சாச்சு, கேஸ் விலை 100 ரூபா கொரச்சாச்சு, டீசல் வெலை 5 ரூபாய் கொரச்சாச்சு, குடும்ப பொம்பளைங்களுக்கு மாசம் 1000 ரூவா குடுத்தாச்சு, ஜாதிய ஒழுச்சாச்சு, கொரோனாவ ஒழுச்சாச்சு,மக்கள் குடுத்த 2 கோடி மனுக்களுக்கு 100 நாலுல தீர்த்தாச்சு, ஒரு கோடி பேருக்கு வேலை குடுத்தாச்சு...., வடிவேல்: போதும் போதும் லிஸ்ட்டு பெருசா போயிட்டிருக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X