கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: ‛‛கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்,'' என கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக பேசியதாவது: தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்களது முயற்சிகள்
pmmodi, narendramodi, education, teachers, schools, students, பிரதமர், நரேந்திர மோடி, மாணவர்கள், கல்வி, ஆசிரியர்கள்,

புதுடில்லி: ‛‛கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும்,'' என கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆசிரியர்களுடன் காணொலி வாயிலாக பேசியதாவது: தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்களது முயற்சிகள் பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள் கல்வித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தர மதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு போட்டித்தன்மையுடன் ஆக்குவது மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.



அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதாவது, ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும், பள்ளிகளில் மாணவர்களுடன் ஒரு மணிநேரம் செலவிட்டு, விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.



latest tamil news


கல்வி சமத்துவமாகவும் இருக்க வேண்டும். ஆடியோ வடிவிலான புத்தகங்கள் கல்வி முறையின் ஒரு பகுதியாகும். இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக, இந்திய சைகை மொழியை ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
08-செப்-202100:07:42 IST Report Abuse
Rajas அர்ஜுனன் அம்பின் நுனியில் அணு இருக்கிறது என்று சொன்ன எங்கள் அன்னன் மேற்கு வங்க கவர்னரின் படிப்பு என்ன தெரியுமா. புகழ்பெற்ற ஜெய்ப்பூர் மகாராஜா காலேஜில் B.Sc (Honours) மற்றும் ராஜஸ்தான் பல்கலையில் சட்ட படிப்பு. என்னே அறிவு.
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
07-செப்-202119:56:48 IST Report Abuse
Venkataramanan Thiru அதாவது எல்லோரும் MUNDUவாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
07-செப்-202117:23:30 IST Report Abuse
Kumar ஆ,ஊனா நீட்டு,நீட்டுனு. லட்சக்கணக்கான மத்திய அரசு வேலைகள் இருக்கிறது. ஆனால் அதில் அதிகம் தேர்ச்சி பெறுவது வட இந்தியர்கள் தான். தமிழ்நாட்டில் தான் கல்வியை சீரழித்து ,அவர்களை படிக்கும் போதே குடிகாரர்கள் ஆக்கி ஒன்றும் செய்யவிடாமல் அழித்து வருகிறார்கள்.தமிழ்நாட்டில் படிக்கும் 90 சதவீத மாணவர்களுக்கு தமிழும் தெரியாது,ஆங்கிலமும் தெரியாது,ஹிந்தி தெரியவே தெரியாது. இதில் எப்படி அவர்கள் படித்து முன்னேற முடியும்.தமிழ் இலக்கியங்களை திராவிட இலக்கியங்கள் என அழைப்பார்களாம். திராவிடத்தின் மொழி என்ன? மொழியே இல்லாத திராவிடம் எவ்வாறு உண்மையாக இருக்கமுடியும். சமச்சீர் கல்வி என்று ஒன்றை கொண்டுவந்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே அழித்து யார்? நீட் இல்லாத போது எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வியைப் பெற்றார்கள்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X