பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (96)
Share
Advertisement
சென்னை: ‛‛மக்களை பாதுகாக்கவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ,'' என்று சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மழைகால நிவாரணம் ரூ.5,000ம் வழங்கப்படுகிறது. அத்துடன் மேலும், ரூ.5,000ம் சேர்த்து ரூ.10
விநாயகர்சிலை, வழிபாடு, ஊர்வலம், பாஜ, கேள்வி, ஸ்டாலின், பதில்

சென்னை: ‛‛மக்களை பாதுகாக்கவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ,'' என்று சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மழைகால நிவாரணம் ரூ.5,000ம் வழங்கப்படுகிறது. அத்துடன் மேலும், ரூ.5,000ம் சேர்த்து ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என்றார்.


கேரளா நிலை தமிழகத்துக்கு வராமல் தடுக்கவே கட்டுப்பாடுகள் தமிழகத்தில் கோவிட் பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது; தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கத்தான் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என ஸ்டாலின் கூறினார். #Stalin #assembly #Corona #VinayagarChaturthi

latest tamil newsஅப்போது பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்ததாவது: கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.கேரளாவில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு பிறகு கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராததால், மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
10-செப்-202112:49:16 IST Report Abuse
Swaminathan Chandramouli நீட் தேர்வை ஆதரிக்கவேண்டும் , குடியுரிமை சட்டம் இந்தியாவில் ஏற்கெனவேயே குடி மக்களாக இருக்கும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் சட்டமில்லை இதை புரிந்துகொள்ளாமல் தத்தி முதலமைச்சர் சட்டசபையில் இதனை ரத்து செய்து விட்டாராம் இவர் ரத்து செய்தவுடன் மத்திய அரசு அதை வாபஸ் வாங்கிவிடுமாம் அதுபோலவே நீட் தேர்வை ஸ்டாலின் ரத்து செய்து விட்டாராம் உடனே மத்திய அரசு நீட் தேர்வை வாபஸ் வாங்கிவிடுமாம் தமிழகத்தின் திருத்தணி எல்லையை தாண்டினால் இந்த திமுக அரசை மதிப்பவர்கள் எவரும் இல்லை சும்மா வெறுமே குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருக்கவேண்டியது தான் திமுக அரசு . விநாயகசதுர்த்தியை மத்திய அரசு கொண்டாடக்கூடாது என்று ஒரு போதும் சொல்லவில்லை சம்மேபத்தில் கரூரில் விநாயகர் சிலையை போலீஸ் காரர்கள் உடைத்தனர் அவர்களைஇந்த திமுக அரசாங்கம் கைது செய்யவில்லையே மக்களின் பொறுமை எல்லை மீறிப்போனால் அதற்க்கு தமிழக அரசாங்கமே பொறுப்பு
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
08-செப்-202112:45:03 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஹிந்துத்வாவாதிகள் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்காக புலம்புவது வீண் யாவும் நன்மைக்கே சிந்தியுங்கள் உங்களுக்கும் புரியும்
Rate this:
Cancel
Ravi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-202122:48:19 IST Report Abuse
Ravi தமிழகம் கோலடிகளின் கோர பிடியில் சிக்கி தவிக்கிறது...எல்லாமே கோல்டி மயம்...முதல்வர், துணை முதல்வர,இணை முதல்வர் எல்லாமே திராவிட மோசடி போர்வையில் தமிழனை ஏமாற்றுகிறார்கள். கலகத்திற்கு ஒத்து ஊதுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X