அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோ-ஆப்டெக்ஸ் துணிகள் தரமானதா?: துரைமுருகன் - பழனிசாமி காரசாரம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபையில், கோ-ஆப்டெக்ஸ் துணிகளின் தரம் குறித்து அமைச்சர் துரைமுருகனும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்டனர்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்ற துணிகள் என நேற்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசினார்.
Duraimurugan, Palanisamy, Co Optex, Quality, Discuss, துரைமுருகன், பழனிசாமி, கோஆப்டெக்ஸ், துணி, தரம், விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில், கோ-ஆப்டெக்ஸ் துணிகளின் தரம் குறித்து அமைச்சர் துரைமுருகனும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்டனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்ற துணிகள் என நேற்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசினார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கூட்டுறவு நெசவாளர் சங்கங்களிடம் இருந்துதான் துணிகளை கொள்முதல் செய்கிறது. எனவே, நெசவாளர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. இவ்வாறு பேசினார்.


latest tamil news


அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், ‛கடந்த ஆட்சிக்காலத்தல் கோ-ஆப்டெக்ஸில் வாங்கிய துணிகள் தரமற்று இருந்ததால் தான் 4 கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டு அந்த துணிகளை விற்பனை செய்யப்பட்டது. எனவே, வாங்கிய துணிகள் தரமற்றது என்று கூறியதில் தவறில்லை,' எனக் குறிப்பிட்டார். இதற்கு மீண்டும் பேசிய பழனிசாமி, ‛அமைச்சர் துரைமுருகன் சமாளித்து பேசுகிறார். கோ-ஆப்-டெக்ஸ் நிறுவனத்தின் துணிகள் தரமற்றது என்றால் பொதுமக்கள் அச்சப்படுவார்கள்,' என்றார்.


latest tamil news


இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‛கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம் தான். கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்படும் துணிகளில் தரமில்லை என்றால் அதை தரமில்லை என்றுதான் குறிப்பிட முடியும். கடந்த ஆட்சியைவிட தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திறம்பட செயல்படும் என சவால் விடுகிறேன்.' எனக் கூறினார். இவ்வாறு இருவருக்கும் காரசார விவாதம் நடைபெற, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசுகையில், ‛கடந்த ஆட்சியில், தனியார்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்களுடைய துணிகளை கொடுத்து, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்தனர். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-202107:17:06 IST Report Abuse
ராஜா தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான கடைகளில் கோ ஆப் tex துணிகளை வைக்கும் அளவுக்கு தரமுடன் இல்லை என்றால் அதை மூடிவிடுவது நலம். எடப்பாடி மற்றும் அதிமுகவினருக்கு பேச தெரியவில்லை. பாஜக இன்னமும் கேள்வி கேட்கவே தொடங்கவில்ல. அரசியல் மற்றும் பொது அறிவு மிகவும் அவசியம் அடுத்த தேர்தலை சந்திக்க.
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
08-செப்-202101:24:10 IST Report Abuse
Arachi நண்பர் இப்போதாவது அதிமுகவை பற்றி புரிந்துகொண்டீர்களே, அது எம்ஜியாரோடு போச்சுங்க. நீங்க சொன்ன ஐடியாவை ரூம் போட்டு யோசித்திட்டு இருக்காங்க.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-செப்-202120:40:28 IST Report Abuse
RajanRajan இவனுங்க கட்டுரை பாலமே தவிடு பொடியாவுது. துணி எம்மாத்திரம். அங்கேயும் சொறிஞ்சு பார்த்திருப்பானுங்க ஜனநாயக உரிமைன்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X