தென்மேற்கு பருவக்காற்றால் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | |
Advertisement
சென்னை: ‛‛தென்மேற்கு பருவக் காற்றால் இன்று (செப்.,7) முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு பருவக் காற்று காரணமாக செப்.,7 முதல் 11 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு
Chennai, Weather Report, Rain, IMD, சென்னை, வானிலை மையம், மழை, தென்மேற்கு பருவக் காற்று

சென்னை: ‛‛தென்மேற்கு பருவக் காற்றால் இன்று (செப்.,7) முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு பருவக் காற்று காரணமாக செப்.,7 முதல் 11 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.



கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 4 செ.மீ., அண்ணா பல்கலை (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை), பெரம்பூர் (சென்னை), வால்பாறை (கோவை) திருவள்ளூர், அயனாவரம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 3 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை


இன்று (செப்.,7) மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.



வங்க கடல் பகுதிகள்:


இன்று (செப்.,7): மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


செப்.,10, 11-ம் தேதி: தென் கிழக்கு, மத்திய வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.



அரபிக்கடல் பகுதிகள்:


செப்.,7 முதல் 11 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.


மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X