பொது செய்தி

இந்தியா

குழந்தைகள் கடும் உடற்பயிற்சி: போலீசார் எச்சரிக்கை

Added : செப் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு:'கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலிருந்த குழந்தைகள், தற்போது பள்ளி செல்கின்றனர். இவர்களை திடீரென விளையாட்டில் ஈடுபடுத்தாமல், படிப்படியாக ஈடுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும்' என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.கர்நாடகாவை ஒன்றரை ஆண்டாக கொரோனா தொற்று வாட்டி வதைத்தது. அரசின் கடும் நடவடிக்கைகளால்,

பெங்களூரு:'கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலிருந்த குழந்தைகள், தற்போது பள்ளி செல்கின்றனர். இவர்களை திடீரென விளையாட்டில் ஈடுபடுத்தாமல், படிப்படியாக ஈடுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும்' என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடகாவை ஒன்றரை ஆண்டாக கொரோனா தொற்று வாட்டி வதைத்தது. அரசின் கடும் நடவடிக்கைகளால், தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.தொற்று பரவல் அளவு, 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளது. உடல் எடை தற்போது விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர். ஒன்றரை ஆண்டாக, வீட்டிலேயே இருந்த குழந்தைகளின் உடல் எடை அதிகரித்துள்ளது.

சில குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல், கொரோனா தொற்று வந்து, சென்றிருக்கலாம்.எனவே, குழந்தைகளை திடீரென விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது. இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் எலும்பு வல்லுனர்கள் கூறியதாவது:பிள்ளைகளை அதிக நேரம், விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது. சில நாட்கள் வரை தினமும் சிறிது நேரம், லேசான உடற் பயிற்சி, நடை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.ஏதாவது உடல் ஆரோக்கிய பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

அதிக சக்தி தேவைப்படும் விளையாட்டு; கடும் உடற்பயிற்சி செய்யவே கூடாது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், நன்றாக இருப்பது உறுதியான பின், மாரத்தான் உட்பட மற்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில், மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். கடினமான விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது போன்று நடந்துள்ளது. இந்தியாவிலும் நடந்திருக்கக் கூடும்.இதற்கு முன் பெரியவர்களிடம் தென்பட்ட பிரச்னை, தற்போது குழந்தைகளுக்கும் வரலாம். இதை மனதில் கொண்டு, உடற்பயிற்சி ஆசிரியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நுரையீரல், இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகத்தை கொரோனா சேதப்படுத்தும் என்பது, ஏற்கனவே உறுதியாகியுள்ளது.

மூச்சுத்திணறல் கொரோனா தொற்று ஏற்பட்டு, குணமடைந்தோருக்கு, மூன்று மாதம் வரை மூச்சுத்திணறல், உடற் சோர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும்.தொற்று எந்த வகையில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, ஊகிப்பது கஷ்டம். எனவே சிறியவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X