பூட்டிய வீடுகளில் கொள்ளை பகாரியா கும்பல் கைது

Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:வீதி, வீதியாக பலுான் விற்றபடி, பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையடித்த, பகாரியா கும்பலை சேர்ந்த மூவரை, அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்தனர்.நோட்டம் ராஜஸ்தானின் பகாரியா கும்பலை சேர்ந்தவர்கள் முகேஷ், 25, தர்மா, 26, லட்சுமண், 25. இவர்கள் ராஜஸ்தானிலிருந்து, ரயிலில் பெங்களூரு வருவர். பலுான்களை வாங்கி, பகல் நேரத்தில் வீதி, வீதியாக விற்றபடி, பூட்டிய வீடுகளை

பெங்களூரு:வீதி, வீதியாக பலுான் விற்றபடி, பூட்டிய வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளையடித்த, பகாரியா கும்பலை சேர்ந்த மூவரை, அம்ருதஹள்ளி போலீசார் கைது செய்தனர்.


நோட்டம்

ராஜஸ்தானின் பகாரியா கும்பலை சேர்ந்தவர்கள் முகேஷ், 25, தர்மா, 26, லட்சுமண், 25. இவர்கள் ராஜஸ்தானிலிருந்து, ரயிலில் பெங்களூரு வருவர். பலுான்களை வாங்கி, பகல் நேரத்தில் வீதி, வீதியாக விற்றபடி, பூட்டிய வீடுகளை நோட்டம் விடுவர்.அந்த வீடுகளுக்கு சென்று, அழைப்பு மணியை அழுத்துவர். யாரும் வெளியே வராவிட்டால், ஒன்றிரண்டு நாட்கள், வீட்டின் அருகில் சுற்றி திரிந்து, யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்துவர்.

அன்றிரவு அந்த வீட்டுக்கு வந்து, பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தங்கநகைகள், விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்பியோடுவர்.புகார் அம்ருதஹள்ளியில் ஒரு வீட்டில் நுழைந்து, 200 கிராம் தங்க நகைகளை திருடிச்சென்றனர். சில நாட்களுக்கு பின், வீடு திரும்பிய உரிமையாளர், திருட்டு நடந்திருப்பதை அறிந்து, அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்த போது, திருடர்களின் முகம் அடையாளம் தெரிந்தது. இந்த நபர்களை பற்றி அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.அதன்பின் சம்பவம் நடந்த இடத்தில் செயல்படும், 'மொபைல் டவர் லொகேஷன்' மூலம் பரிசீலித்தனர்.

ஆயிரக்கணக்கான அழைப்புகளை ஆய்வு செய்த போது, ராஜஸ்தானின் சாபனேரி என்ற பகுதியின் மொபைல் எண் கிடைத்தது.இதன் அடிப்படையில், அங்கு சென்ற போலீசார், தர்மா, லட்சுமண், முகேஷை கைது செய்தனர். 200 கிராம் தங்கநகைகள் மீட்கப்பட்டன. இவர்களுடன் தொடர்புடைய மூவரை, போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-செப்-202104:24:40 IST Report Abuse
Milirvan சப்பாஷ் .. பங்களூரு போலீஸ்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X