சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

தே.மு.தி.க.,வினருக்கு நன்றி!

Added : செப் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தே.மு.தி.க.,வினருக்கு நன்றி!திருப்பூரில், தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் இளைஞரணி செயலர் விஜயபிரபாகரன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'இதுவரை எங்கப்பா விஜயகாந்த்தை பாத்துருப்பீங்க. எங்கம்மா பிரேமலதாவை பாத்து இருப்பீங்க... அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து என்னையும், என் தம்பி சண்முகபாண்டியனையும் பார்க்க
பக்க வாத்தியம்


தே.மு.தி.க.,வினருக்கு நன்றி!



திருப்பூரில், தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் இளைஞரணி செயலர் விஜயபிரபாகரன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'இதுவரை எங்கப்பா விஜயகாந்த்தை பாத்துருப்பீங்க. எங்கம்மா பிரேமலதாவை பாத்து இருப்பீங்க... அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து என்னையும், என் தம்பி சண்முகபாண்டியனையும் பார்க்க போறீங்க. நான், எங்க அப்பாவுக்காக அரசியலுக்கு வந்தேன்... அவர் மாதிரியே சினிமா,
அரசியல் ரெண்டுலயும் ஒரே நேரத்தில் கலக்குவேன்...' என்றார்.அப்போது கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'பிரச்னையில் சிக்கி தவிக்கிற மக்களுக்கு, தே.மு.தி.க.,வினர் தான் கொஞ்சமாவது 'ரிலாக்ஸ்' தாராங்க... அவங்களுக்கு ஏதாவது விருது கொடுக்கலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-செப்-202115:50:23 IST Report Abuse
D.Ambujavalli அப்பா, தனது அவசர புத்தியால் அருமையாகக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொலைத்து, அரசை விரோதித்ததை பார்த்தோம் அம்மா கூட்டணிக்காக அங்கும் பேரம் பேசி, டெபாசிட் கூட வாங்காததை பார்த்தோம், இவர்கள் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X