சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கை கொடுக்குமா கோரக்பூர்?

Added : செப் 07, 2021
Share
Advertisement
கை கொடுக்குமா கோரக்பூர்?'இந்த முறையும் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும்' என்ற முடிவுடன் இருக்கிறார், அந்த மாநில முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத். இதற்கு அவர் மலை போல் நம்பியிருப்பது, உ.பி., மாநில மக்களை அல்ல; அங்குள்ள கோரக்பூர் நகரத்தை. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கோரக்பூரில்

 அக்கம் பக்கம்


கை கொடுக்குமா கோரக்பூர்?



'இந்த முறையும் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும்' என்ற முடிவுடன் இருக்கிறார், அந்த மாநில முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத். இதற்கு அவர் மலை போல் நம்பியிருப்பது, உ.பி., மாநில மக்களை அல்ல; அங்குள்ள கோரக்பூர் நகரத்தை. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கோரக்பூரில் தான், முதன் முதலில் பிரசாரத்தை துவக்கினார், மோடி.
இதைத் தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலிலும் முதல் பிரசாரத்தை கோரக்பூரில் தான் மீண்டும் துவக்கினார். கடந்த 2017ல் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தையும் மோடி, இங்கு தான் துவக்கினார். இந்த மூன்று தேர்தல்களிலுமே பா.ஜ., அபார வெற்றி பெற்றது. உ.பி., முதல்வராவதற்கு முன், கோரக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து ஐந்து முறை வெற்றி பெற்றவர் யோகி ஆதித்யநாத். கோரக்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற மடத்தின் மாடதிபதியாகவும் இருந்தவர். இதனால் அதிர்ஷ்டம், ராசி ஆகியவற்றை கணக்கிட்டு, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தையும் கோரக்பூரிலிருந்தே துவங்கும்படி பிரதமர் மோடிக்கு, வேண்டுகோள் விடுத்துள்ளார் யோகி ஆதித்யநாத்.
இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளார். வரும் அக்., 18ல் கோரக்பூரில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கவுள்ளார் மோடி.கோரக்பூர் வெற்றி 'சென்டிமென்ட்' இந்த முறை ஆதித்யநாத்துக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X