சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 07, 2021
Share
Advertisement
'அப்படியே கருணாநிதி, அண்ணாதுரைக்கும் பிரமாண்ட சிலை வையுங்கள்; தமிழகத்தை, 'சிலைகள் மாநிலம்' என, பிற மாநிலத்தவர் கிண்டல் செய்யட்டும்...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: ஈ.வெ.ரா.,வுக்கு பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சிலை வைப்பது கண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எவ்வளவு ஆத்திரம்... இதில் தான்


பேச்சு, பேட்டி, அறிக்கை

'அப்படியே கருணாநிதி, அண்ணாதுரைக்கும் பிரமாண்ட சிலை வையுங்கள்; தமிழகத்தை, 'சிலைகள் மாநிலம்' என, பிற மாநிலத்தவர் கிண்டல் செய்யட்டும்...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: ஈ.வெ.ரா.,வுக்கு பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சிலை வைப்பது கண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எவ்வளவு ஆத்திரம்... இதில் தான் சங் பரிவார்களுக்கும், சீமான்களுக்கும் கூட்டு பளிச்செனத் தெரிகிறது.


'பெண்களையும் உழைக்க விடவில்லையா; அவர்களும் மூளை சலவை செய்யப்பட்டு விட்டனரா...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் அருகே விராலிபட்டி கிராமத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை நிறுவுவதற்கு, ஜாதியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் முன்னின்று, கொடியை ஏற்றி சாதித்துள்ளனர்.


'இது பற்றி மாநில அரசுகளே கவலைப்படவில்லை; நமக்கென்ன...' என, ஜாடையாக கேட்கத் துாண்டும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
கடந்த 11 மாதமாக மாதம் ஒன்றுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், ஜி.எஸ்.டி., வசூலித்துள்ள மத்திய அரசு, வரி செலுத்துவோரின் விபரங்களையும், மாநில வாரியாக வசூலான தொகையின் விபரங்களையும் மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதில்லை.


'அந்த இட ஒதுக்கீடு சட்டம், பிராமணர்களுக்காக அறிமுகமானது என்று தவறாக அல்லவா தமிழக அரசு நினைக்கிறதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை
: தி.மு.க., உண்மையிலேயே சமூக நீதிக்காக குரல் கொடுக்கிறது என்றால், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.


'அதுபோல, கூட்டணிஇன்றி, தி.மு.க., வெற்றி பெற முடியுமா; இதுவரை தனித்து நின்றதில்லையே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி துணை செயலர் சல்மா அறிக்கை: '
இது தான் தி.மு.க.,வின் கடைசி தேர்தல். இனிமேல் திராவிடத்திற்கு தமிழகத்தில் வேலையில்லை' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணி வைத்திருப்பதே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோட தான். திராணி இருந்தால் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் ஒரு 'சீட்' ஜெயித்து காட்டுங்கள் பார்ப்போம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X