சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அரசு வக்கீல் பதவிக்கு நடக்கும் 'கவனிப்பு!'

Added : செப் 07, 2021
Share
Advertisement
அரசு வக்கீல் பதவிக்கு நடக்கும் 'கவனிப்பு!'''தரிசு நில மேம்பாட்டு திட்டத்தால பெருசா பலன் இல்லைன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''விவசாயிகளை சொல்றீங்களா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''ஆமாம்... வேளாண் துறை சார்புல, தரிசு நிலத்தை மேம்படுத்தி, சாகுபடி செய்ய ஏக்கருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் மானியமா தர்றாங்க... தாலுகாவுக்கு

டீ கடை பெஞ்ச்


அரசு வக்கீல் பதவிக்கு நடக்கும் 'கவனிப்பு!'


''தரிசு நில மேம்பாட்டு திட்டத்தால பெருசா பலன் இல்லைன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''விவசாயிகளை சொல்றீங்களா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''ஆமாம்... வேளாண் துறை சார்புல, தரிசு நிலத்தை மேம்படுத்தி, சாகுபடி செய்ய ஏக்கருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் மானியமா தர்றாங்க... தாலுகாவுக்கு அஞ்சு ஊராட்சிகளை தேர்வு செய்து, தரிசு நிலங்களை மேம்படுத்த, வேளாண் துறை அலுவலர்களுக்கு இலக்கு
நிர்ணயிச்சிருக்காங்க பா...

''கிராமங்கள்ல பெரும்பாலும், பெரிய விவசாயிகளின் தேவைக்கு அதிகமான நிலங்கள் அல்லது விவசாயமே செய்ய முடியாத நிலங்கள் தான் தரிசா கிடக்கும்... இவங்க, வேளாண் அலுவலர்கள் பேச்சை கேட்டு ஒரு வருஷம் மட்டும் சாகுபடி செய்துட்டு, அப்புறம் நிலத்தை தரிசாவே போட்டுடறாங்க பா...

''இதனால, இந்த திட்டத்தின் நோக்கமே நிறைவேறாம போயிடுது... இந்த வருஷமும், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருக்காங்க... அதனால, 'இந்த திட்டத்தால நிஜமான பலன் கிடைச்சிருக்கா'ன்னு முறையா ஆய்வு செய்யணும்னு விவசாயிகளே சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''எங்களை கண்டுக்க மாட்டேங்கறான்னு புலம்பறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை சிட்டியில இருக்கற போலீசார், தங்களது பிள்ளைகளுக்கு 'காலேஜ்ல அப்ளிகேஷன்' போட்டதும், தாங்கள் 'டூட்டி' பாக்கற ஸ்டேஷன்ல தகவல் தெரிவிப்பா... இந்த தகவல், கமிஷனர் ஆபீசுக்கு போயிடும்...

''அங்க இருந்து, சம்பந்தப்பட்ட காலேஜ் இருக்கற டி.சி., ஆபீசுக்கு அந்த மனுக்களை அனுப்புவா... டி.சி., ஆபீஸ்ல இருந்து ஏ.சி., ஆபீஸ்களுக்கு வர்ற மனுக்களை, அவா நேரா காலேஜ்க்கு எடுத்துண்டு போய், நிர்வாகத்திடம் பேசி, 'சீட்' வாங்கி தரணும் ஓய்...

''இந்த நடைமுறையில, உயர் அதிகாரிகள் பலரும், தங்களது பிள்ளைகளுக்கும், வேண்டியவாளுக்கும் மட்டும் சீட்களை வாங்கிடறா... கீழ்மட்ட போலீசாரை கண்டுக்க மாட்டேங்கறாளாம்...

''அதனால, 'கமிஷனர் தலையிட்டு, அடிமட்ட போலீசாரின் பிள்ளைகளுக்கும் சீட் கிடைக்க நடவடிக்கை எடுக்கணும்'னு, போலீசார் தரப்புல சொல்றா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.

''அரசு வக்கீல் பதவிக்கு கடும் போட்டி நடக்குல்லா...'' என, கடைசி மேட்டரை கையில் எடுத்தார் அண்ணாச்சி.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கோவை கோர்ட்கள்ல 20க்கும் மேற்பட்ட அரசு வக்கீல்கள் பதவிக்கு, தி.மு.க.,வினர் மத்தியில கடும் போட்டி நடக்கு... இந்தப் பதவிக்கு விண்ணப்பிச்ச 132 பேரிடம், சமீபத்துல நேர்காணல் நடந்திருக்கு வே...

''ஆனாலும், கட்சி மேலிடம் தர்ற பட்டியல் அடிப்படையில தான் நியமனம் இருக்கும்... இதனால, பல வக்கீல்கள், மாவட்டச் செயலர்களை சிறப்பா கவனிச்சிட்டாவ வே...

''பெரிய அளவுல அனுபவம் இல்லாத, கட்சிக்கு வந்து சில வருஷமே ஆன வக்கீல்கள் கூட, பல லட்சங்களை வாரி கொடுத்து, அரசு வக்கீல் பதவிகளுக்கு காய் நகர்த்துதாவ... இதுக்கு இடையில, 60 வயதுக்கு மேற்பட்ட வக்கீல்களுக்கு பொறுப்பு கிடையாதுன்னு கட்சி மேலிடம் சொல்லிட்டதால, சீனியர் வக்கீல்கள் பலரும் அதிருப்தியில இருக்காவ... 'இந்த வயது வரம்பை தளர்த்தணும்'னு கட்சி மேலிடத்திடம் வலியுறுத்திட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X